சோழவந்தானில் ஜெனக நாராயண பெருமாள் கள்ளழகர் வேடத்தில் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சியில் எம்விஎம் குடும்பத்தார் சார்பாக மண்டகப்படி: - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Tuesday, 23 April 2024

சோழவந்தானில் ஜெனக நாராயண பெருமாள் கள்ளழகர் வேடத்தில் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சியில் எம்விஎம் குடும்பத்தார் சார்பாக மண்டகப்படி:

 


சோழவந்தானில் ஜெனக நாராயண பெருமாள் கள்ளழகர் வேடத்தில் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சியில் எம்விஎம் குடும்பத்தார்  சார்பாக மண்டகப்படி:


சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு, மதுரை  சோழவந்தான் ஜெனக நாராயண பெருமாள் கோவில் சித்திரை திருவிழா வின் நிகழ்ச்சியான வைகை ஆற்றில் ஜெனக நாராயண பெருமாள்  பச்சை பட்டு உடுத்தி வெண் குதிரை வாகனத்தில் வைகை ஆற்றில் எழுந்தரிளினார். இதில், சோழவந்தான் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து 10, 000தற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கள்ளழகரை தரிசித்தனர். முன்னதாக, எம். வி. எம். மருது மஹால் மற்றும் எம் வி எம் மருது பெட்ரோல் பல்க் ஆகிய இடங்களில் ஜெனக நாராயண பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகங்கள்  செய்யப்பட்டது. தொடர்ந்து, பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில், பாஜக விவசாய அணி மாநிலத் தலைவர் மணி முத்தையா, கவுன்சிலர்கள் வள்ளி மயில், டாக்டர் அரிமா மருது பாண்டியன், மற்றும் எம்.வி.எம். குடும்பத்தினர்கள் கலந்து கொண்டு கள்ளழகரின் ஆசி பெற்றனர். இதில், கோவில் சார்பில்  எம் .வி. எம். குடும்பத்தினருக்கு மரியாதைகள் செய்யப்பட்டது.

No comments:

Post a Comment

Post Top Ad