அவனியாபுரம், மீனாட்சியம்மன் கோயில் திருக்கல்யாணம்: - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Monday, 22 April 2024

அவனியாபுரம், மீனாட்சியம்மன் கோயில் திருக்கல்யாணம்:

 


அவனியாபுரம், மீனாட்சியம்மன் கோயில் திருக்கல்யாணம்:


மதுரை அருகே உள்ள  அவனியாபுரத்தில், பாண்டிய மன்னர் காலத்திய பாலா மீனாம்பிகை கல்யாண சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் திருக்கல்யாண விழா நடைபெற்றது.


மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் அருகே உள்ள, அவனியாபுரத்தில் பாண்டிய காலத்திய ஆறாம் நூற்றாண்டை சேர்ந்த பால மீனாம்பிகை கல்யாண சுந்தரேஸ்வரர் திருக்கோவில் உள்ளது. புராணங்களில் மீனாட்சி குழந்தையாக இருக்கும்போது விளையாடிய திருத்தலமாக கருதப்படுகிறது. சித்திரைத் திருவிழாவை ஒட்டி நடைபெறும் திருவிழாவைப் போல், அவனியாபுரம் பாலம் மீனாம்பிகை திருக்கோயிலும் கொடியேற்றத்துடன் திக்விசயம் திருக்கல்யாணம் பூப்பல்லாக்கு போன்ற அனைத்து நிகழ்ச்சிகளும் நடைபெறும். அதனை ஒட்டி, இன்று காலை எட்டு நாற்பது மணியளவில் பாலா மீனாபியை கல்யாண சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் கோவில் வளாகத்தில் நடைபெற்றது. கோவில் குருக்கள் நாகசுப்பிரமணியன், சந்திரசேகர் பக்தர்கள் இணைந்து திருக்கல்யாண வைபோகத்தை நடத்தி வைத்தனர். கோவில் செயல் அலுவலர் சங்கரேஸ்வரி மற்றும் திருக்கோயில் பணியாளர்கள், ஹிந்து அறநிலைய பாதுகாப்பு குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட ஆயிரகணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


திருக்கல்யாணத்தில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு திருக்கோவில் சார்பாக அன்னதானம் வழங்கப்பட்டது. மேலும், திருக்கல்யாண வடிவத்தில் கலந்து கொண்ட பக்தர்கள் திருக்கல்யாண மொய் எழுதினர்

No comments:

Post a Comment

Post Top Ad