சோழவந்தான் சங்கங் கோட்டை பகுதியில் திமுகவினர் தீவிர வாக்கு சேகரிப்பு. - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Saturday, 6 April 2024

சோழவந்தான் சங்கங் கோட்டை பகுதியில் திமுகவினர் தீவிர வாக்கு சேகரிப்பு.


தேனி நாடாளுமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் தங்க தமிழ்ச்செல்வனுக்கு, வாக்குகள் கேட்டு சோழவந்தான் தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் திமுகவினர் தீவிர தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

சோழவந்தான் பேரூர் கழகத்திற்கு உட்பட்ட 6-வது வார்டு சங்கங்கோட்டை பகுதியில், திமுகவினர் தங்கத்தமிழ் செல்வனுக்கு வாக்குகள் கேட்டு வீதி வீதியாக தீவிர  வாக்கு சேகரித்தனர். வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தியின் ஆலோசனையின் பேரில், சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் எம். எல். ஏ. வின் அறிவுறுத்தல் படி, சோழவந்தான் பேரூராட்சி தலைவர் எஸ். எஸ். கே. ஜெயராமன், பேரூர் செயலாளர் வழக்கறிஞர் சத்திய பிரகாஷ் ஏற்பாட்டில், கட்சியினர் வாக்காளர் களிடம் வீடு வீடாக சென்று உதயசூரியனுக்கு வாக்குகள் கேட்டனர்.


இதில், நிர்வாகிகள் வார்டு செயலாளர் ஆர். ஆர். ரவி ,வார்டு பிரதிநிதி சங்கங்கோட்டை சந்திரன் மற்றும் சரவணன், சமரன், மோகன், ஆறுமுகம் ராஜா, கார்த்திக், தக்காளி கணேசன், காளிமுத்து உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad