மதுரையில், பிரதான சாலையான சிம்மக்கல் அருகே செல்லத்தம்மன் கோவில் உள்ளது. இதன் அருகே, மின்மாற்றி நேற்று 10/15 அளவில் திடீரென மின்மாற்றில் தீப்பற்றி எறிய தொடங்கியது. மேலும், மின்வாற்றில் கீழே மின்மாற்றி போற்றக்கூடிய ஆயிலும் கொட்டி கிடந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், மின் மாற்றி திடீரென வெடித்து மலமளவென தீப்பற்றி எறிய தொடங்கிய இதைப் பார்த்து அப்பகுதி மக்கள், உடனடியாக மதுரை டவுன் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். தீயணைப்பு மற்றும் பேரிடர் மீட்பு குழுவினர் மற்றும் மின் ஊழியர்கள் சுமார் அரை மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
அதிக அளவு லாரி ஷெட்டுகள் உள்ள பகுதியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது தீ விபத்து குறித்து, திலகர் திடல் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்..
No comments:
Post a Comment