மதுரை விமான நிலையத்தில் தேர்தல் விதிமுறைகளை மீறும் அதிகாரிகள் விழி பிதுங்கி நிற்கும் ஊழியர்கள். - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Friday 12 April 2024

மதுரை விமான நிலையத்தில் தேர்தல் விதிமுறைகளை மீறும் அதிகாரிகள் விழி பிதுங்கி நிற்கும் ஊழியர்கள்.


மதுரை விமான நிலையத்தில், பாதுகாப்பு பணிக்காக மத்திய தொழில்  பாதுகாப்பு படை ஊழியர்கள் உள்ளனர். மேலும், பயணமுனைய அலுவலகத்தில் கீழ் பணியாளர்களும் முதன்மை பாதுகாப்பு அலுவலர் என்ற நிலையில் பாதுகாப்பு அதிகாரிகளும் பணி புரிகின்றனர். தற்போது, நடைபெற்று வரும் நாடாளுமன்ற தேர்தல் பரப்புரை காரணமாக பல்வேறு அரசியல் கட்சியினர் விமானம் மூலம் மதுரை வந்தடைகின்றனர்.

 

அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளை வரவேற்பதற்கு மதுரை விமான நிலையம் வருகின்றனர்.  அதில், மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சகம் தேர்தல் விதிமுறைகளை வகுத்து அதன்படி முக்கிய பிரமுகர்களை வரவேற்க குறைந்த அளவு நிர்வாகிகளுக்கு அனுமதி வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

 

பாதுகாப்பு காரணங்கள் தொடர்பாக, மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சகம் அனைத்து விமான நிலைய முதன்மை பாதுகாப்பு அலுவலர் மத்திய தொழில் பாதுகாப்பு படை அலுவலகம் ஆகியவற்றிற்காக  மெயில் அனுப்பி உள்ளது. அதன் அடிப்படையில், செயல்பட அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அறிவுறுத்தியுள்ளது.


ஆனால், மதுரை விமான நிலையத்தில் உள்ள விமான நிலைய இயக்குனர் முத்துக்குமார் முதன்மை பாதுகாப்பு அலுவலர் கணேசன் மற்றும் பயண முனைய மேலாளர்கள் மதுரை விமான நிலைய பொது மேலாளர் உள்ளிட்ட பல் துறை அதிகாரிகள் ஆளுங்கட்சி அமைச்சர்கள் முக்கிய பிரமுகர்கள் வருகையின் போது, வரவேற்பிற்கு வழங்கப்படும் அனுமதி சீட்டு வழங்க தாராளமாக சலுகை காட்டுகின்றனர். 


இதே போல், மற்ற கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் குறிப்பாக அதிமுக மற்றும் பிற கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் வரும்போது, அவர்களிடம் கடுமையாக நடந்து கொள்கின்றனர். முறையான அனுமதி வழங்கப்படுவதில்லை காரணம் கேட்டால், விமான நிலைய விதிமுறைகள் எனக் கூறி அதிகாரிகள் தப்பித்துக் கொள்கின்றனர். விதிமுறைகளை மீறி வழங்கப்படும் பாஸ்களால் மதுரை விமான நிலையத்தில் உள்ள மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் மற்றும் விமான நிலைய ஊழியர்கள் பாதிப்படைகின்றனர்.

 

இதனால், அதிகமாக வரும் கட்சி நிர்வாகிகளுக்கும் மத்திய தொழில் பாதுகாப்பு படையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்படுகிறது. இதேபோல், பிற கட்சியினர் அவர்களை தொடர்ந்து தங்களுக்கு ஏன் அனுமதி மறுக்கப்படுகிறது என்று கேள்விகளால் துளைக்கின்றனர். ஆகவே, மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சகம்  பாதுகாப்பு பணிகளுக்கான விஷயத்தில் உடனடியாக தலையிட்டு தேர்தல் பணிகளுக்கான விதிமுறைகளை பின்பற்ற வலியுறுத்தி முறையான அனுமதி வழங்கவும் ஏற்பாடு செய்ய வேண்டும் என, கோரிக்கை விடுத்துள்ளனர். 

No comments:

Post a Comment

Post Top Ad