கோயில்களில் இன்று மாலை சங்கட ஹர சதுர்த்தி விழா: - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Friday 26 April 2024

கோயில்களில் இன்று மாலை சங்கட ஹர சதுர்த்தி விழா:


கோயில்களில் இன்று மாலை சங்கட ஹர சதுர்த்தி விழா:


 மதுரை மாவட்டத்தில், உள்ள கோயில்களில் இன்று மாலை சங்கடஹரசதுர்த்தி விழா சிறப்பாக நடைபெறுகிறது. மாதந்தோறும் பௌர்ணமி கழித்து  இரண்டாம் நாள் சங்கடஹர சதுர்த்தி  விழா எல்லா கோயில்களிலும் விநாயகருக்கு நடைபெறும். மதுரையில், உள்ள சௌபாக்கியம் ஆலயம், சித்தி விநாயகர் ஆலயம், வர சக்தி விநாயகர் ஆலயம், சர்வேஸ்வரர் கோயில், ஜூபிலிடவுன் ஞானசக்தி விநாயகர், கோமதிபுரம் செல்வ விநாயகர் ஆலயம், மதுரை மீனாட்சி அம்மன் கோவில், தெப்பக்குளம் முத்தீஸ்வரன் கோவில், திருமங்கலம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில், அவனியாபுரம் மீனாட்சி கோவில் ஆகிய கோயில் உள்ள விநாயகருக்கு இன்று மாலை பால், தயிர் போன்ற அபிஷேகங்கள் செய்யப்பட்டு, விநாயகருக்கு சிறப்பு அர்ச்சனைகள் நடைபெறும். பக்தர்களுக்கு கொழுக்கட்டை, தயிர் சாதம், சர்க்கரை பொங்கல் போன்ற பிரசாதங்கள் படைக்கப்பட்டு பக்தருக்கு, வழங்கப்படும். முன்னதாக, விநாயகருக்கு ஹோமங்கள் நடைபெறும். அதைத் தொடர்ந்து, தீபாராதனை போன்ற நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

No comments:

Post a Comment

Post Top Ad