வாடிப்பட்டி தெற்கு ஒன்றியம் முள்ளிப்பள்ளம் திருவேடகத்தில் தங்க தமிழ்ச்செல்வன் தேர்தல் பிரச்சாரம். - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Monday 8 April 2024

வாடிப்பட்டி தெற்கு ஒன்றியம் முள்ளிப்பள்ளம் திருவேடகத்தில் தங்க தமிழ்ச்செல்வன் தேர்தல் பிரச்சாரம்.


மதுரை புறநகர் வடக்கு மாவட்டம் வாடிப்பட்டி தெற்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட முள்ளி பள்ளம் மற்றும் திருவேடகம் பகுதிகளில் திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். பிரச்சாரத்தின் போது, சோழவந்தான் வெங்கடேசன் எம். எல். ஏ. மற்றும் ஒன்றிய செயலாளர் பசும்பொன்மாறன் ஆகியோர் பல்வேறு பகுதிகளுக்கு வேட்பாளர் உடன் சென்று வாக்குகள் சேகரித்தனர். 

முள்ளிபள்ளம் ஊராட்சியில், தேர்தல் பிரச்சாரத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு உற்சாக வரவேற்பு அளித்தனர். ஏற்பாடுகளை, ஊராட்சி செயலாளர் கேபிள் ராஜா செய்திருந்தார். இதில், கிளை நிர்வாகிகள் மற்றும் திமுகவினர் கலந்து கொண்டனர். திருவேடகம் ஊராட்சியில், நடைபெற்ற பிரச்சாரத்தில்  தங்க தமிழ்ச்செல்வனுக்கு நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் வரிசையில் நின்ற ஆரத்தி எடுத்து வரவேற்பு கொடுத்தனர். இதில், நிர்வாகிகள் சி. பி. ஆர். சரவணன், ராஜா என்ற பெரிய கருப்பன் மற்றும் திமுகவினர் கலந்து கொண்டனர். 

No comments:

Post a Comment

Post Top Ad