சோழவந்தான் அருகே குருவித்துறையில் 800 ஆண்டுகளுக்குப் பிறகு சித்திர ரத வல்லப பெருமாள் கள்ளழகர் வேடத்தில் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு அருள் பாலித்தார் - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Tuesday 23 April 2024

சோழவந்தான் அருகே குருவித்துறையில் 800 ஆண்டுகளுக்குப் பிறகு சித்திர ரத வல்லப பெருமாள் கள்ளழகர் வேடத்தில் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்


சோழவந்தான் அருகே குருவித்துறையில் 800 ஆண்டுகளுக்குப் பிறகு சித்திர ரத வல்லப பெருமாள் கள்ளழகர் வேடத்தில் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்:


 சோழவந்தான் அருகே, குருவித்துறை சித்திர ரத வல்லபபெருமாள் கோவில் மிகவும் சிறப்பு பெற்ற கோவில்களில் ஒன்றாகும். இங்கு 800 ஆண்டுகளுக்கு முன்பாக வைகை ஆற்றில் சித்திர ரத வல்லப பெருமாள் கள்ளழகர் தோற்றத்தில் இறங்கியதாக இங்கு உள்ள கோவில் அர்ச்சகர் மற்றும் கிராம நிர்வாகிகள் தெரிவித்தனர். இதன் பேரில், இந்த ஆண்டு சித்ரா பௌர்ணமி அன்று இங்குள்ள வைகை ஆற்றில் சித்திர ரத வல்லவபபெருமாள் கள்ளழகர் தோற்றத்தில் வெள்ளை குதிரையில் அலங்காரமாகி சடகோபன்பட்டர், ஸ்ரீதர்பட்டர், ஸ்ரீ பாலாஜி பட்டர் ஆகியோர் பூஜைகள் செய்தனர்.

இதைத் தொடர்ந்து, கள்ளழகர் கோவில் வளாகத்தை சுற்றி வைகை ஆற்றில் இறங்கினார். அப்பொழுது அங்கிருந்த பக்தர்கள் தண்ணீர் பீச்சி கள்ளழகரை வரவேற்றனர்.  அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. 800 ஆண்டுகளுக்கு பின்னர்  வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் நிகழ்ச்சியில் கிராமப் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

கோவில் செயல் அலுவலர் கார்த்தியை செல்வி, கோவில் பணியாளர் மணி, டி.ஆர்.மகாலிங்கம் பாடகர் பேரன் ராஜேஷ் மகாலிங்கம், சங்கரன், சோழவந்தான் ஆர் கிரி, இரும்பாடி முத்துப்பாண்டி, தென்கரை புதூர் முத்து மற்றும்  ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

விழா ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகிகள், மற்றும் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர். காடுபட்டி போலீசார் பாதுகாப்பு ஏற்பாடு செய்திருந்தனர்.

No comments:

Post a Comment

Post Top Ad