சோழவந்தான் எம் வி எம் கலைவாணி பள்ளியில் 16வது ஆண்டு விழா. - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Tuesday 2 April 2024

சோழவந்தான் எம் வி எம் கலைவாணி பள்ளியில் 16வது ஆண்டு விழா.


மதுரை, சோழவந்தானில் வாடிப்பட்டி ரோட்டில் அமைந்துள்ள எம்வி எம் கலைவாணி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியின் 16வது ஆண்டு விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, நீதியரசர் ரவி தலைமை  தாங்கினார். எம் வி எம் குழுமத்தின் தலைவரும் தொழிலதிபருமான மணி முத்தையா, வள்ளி மயில் தம்பதியினர் குத்து விளக்கேற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர். 

மாணவ மாணவிகளின் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் சாகச நிகழ்ச்சிகள் போட்டிகள் நடைபெற்றன. நிகழ்ச்சியில், கலந்து கொண்ட அனைத்து மாணவ மாணவிகளுக்கும் பள்ளியின் தாளாளரும் பேரூராட்சி கவுன்சிலரும் அரிமா சங்கத் தலைவருமான டாக்டர் எம் .வி .எம். மருது பாண்டியன் பரிசுகளை வழங்கி பாராட்டினார். நிகழ்ச்சியில், தலைமை ஆசிரியர் செல்வம், உதவி தலைமை ஆசிரியை தீபா ராகினி மற்றும் ஆசிரியர் ஆசிரியைகள் பெற்றோர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad