முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை புகழ்ந்த அமைச்சர் உதயநிதி. - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Saturday 23 March 2024

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை புகழ்ந்த அமைச்சர் உதயநிதி.


வருகின்ற நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு விருதுநகர் தொகுதி திமுக மற்றும் காங்கிரஸ் கூட்டணி கட்சியின் வேட்பாளர் மாணிக்க தாகூரை ஆதரித்து வாக்கு சேகரிக்க இன்று திருமங்கலம் வருகை தந்த விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாக்கு சேகரித்தார் இதில் கடந்த பாராளுமன்றத் தேர்தல் எப்படி வெற்றி தேடி வந்தீர்களோ அதே போல் இந்த தடவையும் 50,000 வாக்குகளுக்கு மேல் வெற்றி பெற செய்ய வேண்டும் என்று வாக்கு சேகரித்தார். 

இதில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களை புகழ்ந்த உதயநிதி அவர் உயிருடன் இருக்கும் வரை தமிழகத்தில் நீட் தேர்வை கொண்டு வரவில்லை அவர் இறந்த பிறகு ஒன்றிய அரசான பிஜேபி நீட் தேர்வை கொண்டு வந்து மாணவ மாணவியர்களை அலகலித்து தற்கொலை முயற்சி செய்து கொள்ளும் வகையில் ஆட்சி நடத்தி வருகிறது.இந்த பிஜேபி அரசு.அதனால் பொதுமக்கள் அனைவரும் நாடாளுமன்ற தேர்தலில் திமுகவை மாபெரும் வெற்றி பெற வைக்க வேண்டும், மீண்டும் இந்த விருதுநகர் தொகுதியில் மாணிக்க தாகூரை வெற்றி பெற வைக்க வேண்டும் என்று வாக்கு சேகரித்தார். 

No comments:

Post a Comment

Post Top Ad