மயானத்திற்கு செல்லும் பாதை ஆக்கிரமிப்பு மற்றும் மயானத்தின் சுற்றளவை குறைத்து சுற்றுச்சுவர் கட்டுவதையும் தடுத்து நிறுத்துவதற்கு மனு. - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Tuesday 5 March 2024

மயானத்திற்கு செல்லும் பாதை ஆக்கிரமிப்பு மற்றும் மயானத்தின் சுற்றளவை குறைத்து சுற்றுச்சுவர் கட்டுவதையும் தடுத்து நிறுத்துவதற்கு மனு.


திருமங்கலம் தாலூகா  சித்தாலை ஊராட்சியில் உள்ள பொதுமக்கள் மக்கள் பயன்படுத்தும் மயானத்திற்கு செல்லும் பாதை ஆக்கிரமிப்பு மற்றும் மயானத்தின் சுற்றளவை குறைத்து சுற்றுச்சுவர்  கட்டுவதையும் தடுத்து நிறுத்துவதற்கு மாவட்ட ஆட்சியர், தாசில்தார் போன்ற அதிகாரிகளுக்கு மனு கொடுக்கவேண்டும் என்று கிளைக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதன் அடிப்படையில் நேற்று மாவட்ட ஆட்சியர்அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.இதன் விளைவாக இன்று தாலூகா காவல் நிலையத்தில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு சுற்றுச்சுவர் கட்டுவது தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

      

மேலும் அதே சித்தாலை ஊராட்சியில் தரமற்ற குடிநீர் வருவதாகவும் அந்த குடிநீரில் கழிவு நீர் கலந்து வருவதாகவும் திருமங்கலம் வட்டார வளர்ச்சி அலுவலர் வில்சனனிடம் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட துணைச்செயலாளர்  சந்தானம் அவர்கள் தலைமையில்  ஊர்மக்கள் சார்பாக மனு அளிக்கப்பட்டது.


இந்நிகழ்வில் மாவட்டக்குழு உறுப்பினர்  செல்லவேலுமாதர் சம்மேளன செயலாளர்  நாகஜோதி ஆகியோர் கலந்துக்கொண்டனர்.மேலும் பொதுமக்களுக்கு வேண்டிய சில பணிகள் கிடப்பில் உள்ளது இதை உடனடியாக சரிசெய்து பயன்பாட்டில் வர வேண்டும் என்று பொதுமக்கள் அனைவரும் கோரிக்கை விடுத்துள்ளனர். 

No comments:

Post a Comment

Post Top Ad