பாஜக பிரமுகர் எக்ஸ் தள பதிவால் சர்ச்சை. - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Sunday 10 March 2024

பாஜக பிரமுகர் எக்ஸ் தள பதிவால் சர்ச்சை.


விருதுநகர் நாடாளுமன்ற தொகுதிக்கு தன்னையே வேட்பாளராக நட்டா நியமித்துள்ளதாக டாக்டர் வேதா என்பவர் எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டதால் சர்ச்சை -  பாஜக மேலிடம் தன்னை வேட்பாளராக அறிவிக்க நிராகரித்தால், வருகிற 13-ஆம் தேதி பத்தாயிரம் இளைஞர்களை கொண்டு கப்பலூரில் அமைந்திருக்கும் ஒன்றிய அரசின் சுங்கச்சாவடி முன்பு சாலை மறியல் நடத்துவதாகவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

வருகிற நாடாளுமன்றத் தேர்தலுக்காக, பாஜக சார்பில் தமிழகத்தில் இதுவரை அதிகாரபூர்வமாக வேட்பாளர்களை அறிவிக்காத நிலையிலும்,  கூட்டணி கட்சியினரிடையே உடன்பாடு ஏற்படாத நிலையில், விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில் வேட்பாளராக தங்களை நியமித்துள்ளதாக ராம. சீனிவாசன் என்பவரும்,  டாக்டர் வேதா என்பவரும் ஒருவருக்கொருவர் போட்டி போட்டுக் கொண்டு சுவர் விளம்பரங்களை செய்துள்ள நிலையில், பாஜகவின் நட்டா, தன்னையே வேட்பாளராக நியமித்துள்ளதாக டாக்டர் வேதா என்பவர் எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ளதால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. 


மேலும், தன்னை வேட்பாளராக அறிவிக்க நிராகரித்தால், வருகிற 13-ஆம் தேதி திருமங்கலம் அருகே கப்பலூரில் அமைந்துள்ள ஒன்றிய அரசின் சுங்கச்சாவடி முன்பு பத்தாயிரம் இளைஞர்களை கொண்டு மறியல் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் எச்சரிக்கை விடுத்துள்ளார். (இது குறித்து டாக்டர் வேதாவிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய போது,  விருதுநகர்  தொகுதியை கூட்டணி கட்சியான சமத்துவ மக்கள் கட்சி வேட்பாளராக ராதிகா சரத்குமாருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளதாகவும்,  அவ்வாறு ஒதுக்கப்பட்டால், பாஜக தேவர் சமுதாயத்தை புறக்கணிப்பு செய்துள்ளதை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக எச்சரித்து பேசினார்).

No comments:

Post a Comment

Post Top Ad