மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் இராமநாதபுரம் தொகுதியில் சுயேட்சையாகப் போட்டியிடுகிறார். அவரது ஆணைக்கிணங்க இன்று கூட்டணி கட்சியான ஆளும் பாஜக கட்சி மற்றும் பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் சேர்ந்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இதில் விருதுநகர் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமாரை வெற்றி பெற செய்ய வேண்டும் அதற்காக அனைவரும் ஒன்றினைந்து இந்த தேர்தலை சந்திக்க தயாராக இருக்கிறோம். அதிமுகவை இரண்டாக பிரித்தது உதயக்குமார் தான் என்று பாஜக நகர் தலைவர் கூறினார். இக்கூட்டத்தில் பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் மாவட்ட பொருளாளர் மற்றும் நகர் செயலாளர் நிர்வாகிகள் மூ.சி.சோ.ஆ.ரவி, மு.சி.சோ நிரஞ்சன், மாநிலச் செயலாளர் தமிழ்மணி, மாவட்டச் செயலாளர் விஜேந்திரன், திருமங்கலம் நகர் தலைவர் சிவகுமார், நகர் துணைத் தலைவர் மற்றும் நகர் நிர்வாகிகள் & அணி, பிரிவு தலைவர்கள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment