மதுரை விமான நிலைய மத்திய தொழில் பாதுகா காப்பு படை மைதானத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தேசிய பேரிடர் மீட்புப் படை அரக்கோணம் துணை கமாண்டன்ட் சங்கேத் தலைமையில் தேசிய பேரிடர் மேலாண்மை துறை ஆணைய ஆலோசகர்கள் ரஜினேஷ் மற்றும் சுந்தர் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது . தேசிய பேரிடர் மீட்பு படை மற்றும் முதலுதவி மைய வீரர்கள் 45 பேர் பயற்சி முகாமில் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் விமானநிலைய தொழிற் பாதுகாப்பு படை CISF துணை கமாண்டன்ட் அதிகாரி விஸ்வநாதன் மற்றும் விமான நிலைய முதுநிலை மேலாளர் ஹரி சங்கர் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் இந்த ஒத்திகை பயிற்சியில் விமான நிலைய தீயணைப்பு வீரர்கள் மற்றும் மருத்துவ துறை அலுவலர்கள் உள்ளிட்ட 150க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
அணுகதிர்வீச்சுகள் ஏற்பட்டால் அவற்றிலிருந்து விமான பயணிகள் ஊழியர்களை எவ்வாறு மீட்பது மற்றும் பாதுகாப்பாக முதலுதவி வழங்கி மருத்துவ மனைக்கு கொண்டு செல்வது என ஒத்திகை நடைபெற்றது. விமான நிலைய தீயணைப்பு துறை மற்றும் மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் குழு, மற்றும் விமான நிறுவன ஊழியர்கள் பங்கு பெற்ற 3 நாள் பயிற்சி முகாம் K 4 ஹோட்டலில் 2 நாட்களும் நிறைவு நாளான இன்று விமான நிலைய மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் மைதானத்தில் நடை பெற்றது.
No comments:
Post a Comment