இலவச வீட்டு மனை பட்டா கோரி மனு - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Wednesday, 13 March 2024

இலவச வீட்டு மனை பட்டா கோரி மனு


தமிழ்நாடு மருத்துவ குல சமுதாய சங்கத்தின் சார்பாக, மருத்துவ சமூக மக்களுக்கு தமிழக அரசின்  இலவச வீட்டு மனை பட்டா கோரி வாடிப்பட்டி தாலுகா அலுவலகத் தில் மனு கொடுக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு, சங்க மாநில இளைஞ ரணித் தலைவர், மாவட்டச் செயலாள ர் குன்றத்து செந்தில் தலைமையில், மதுரை மாவட்ட துணைத் தலைவர் சி.செல்வம், மாவட்டத் துணைச் செயலாளர்  தீ.பாலமுருகன், நகரச் செயலாளர் பி.கோபி, நகரத் தலைவர் எம்.முத்துப்பாண்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

வாடிப்பட்டி மற்றும் அலங்காநல்லூர் பாலமேடு ஆகிய பகுதிகளில் வசிக்கும் மருத்துவ சமுதாய மக்களுக்காக இலவச வீட்டு மனை பட்டா கேட்டு, வாடிப்பட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் தாசில்தார் மூர்த்தியிடம் ‌மீண்டும் தனித்தனியாக மனு அளிக்கப்பட்டது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன் வாடிப்பட்டி தாலுகா முழுவதும் ஏழை எளியோர் திருநங்கை ஊனமுற்றவர்களுக்கு1332 பேருக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கியது போல், வறுமை நிலையில் வாழும் மருத்துவ சமூகத்தை சேர்ந்த எங்களுக்கும் இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டது.


இதில், மதுரை மாவட்ட நிர்வாகிகள் மாவட்டப் பொருளாளர் ஆசை தம்பி, ஈ.ரா.சுரேஷ், மலையரசன், சேவற்கொடி, செந்தில், பாலமேடு மருத்துவ மக்கள் சார்பாக ஆர்.முருக வேல், எஸ்.பி.பால முருகன், க.பால முருகன், அ.பால முருகன் உட்பட உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். 

No comments:

Post a Comment

Post Top Ad