தமிழக முதலமைச்சர் மு. க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு திமுக கட்சியினர் கொண்டாடினர். - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Friday 1 March 2024

தமிழக முதலமைச்சர் மு. க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு திமுக கட்சியினர் கொண்டாடினர்.


மதுரை தெற்கு மாவட்டம் திமுக சார்பாக திருமங்கலம் தொகுதியில் அனைத்து பகுதிகளிலும் முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் பிறந்தநாளை  கொண்டாடி வருகிறார்கள். இதனை முன்னிட்டு திருமங்கலம் கிழக்கு ஒன்றிய செயலாளர் தங்கபாண்டியன் முன்னிலையில் திருமங்கலம், தொகுதியில் உள்ள சுங்குராம்பட்டி கிராமத்தில் ஒன்றிய கவுன்சிலர்  சோனியா விஜய்.  தலைமையில் கேக் வெட்டி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்கள்.

மேலும் பொதுமக்களுக்கு வருகின்ற நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு துண்டு பிரசுரங்களை கொடுத்தும் திமுகவின் மூன்றாண்டு சாதனைகளை பற்றியும் எடுத்து கூறினார். மேலும் இந்நிகழ்வில் பெருமாள்,பெரிய கருப்பன் ராமகிருஷ்ணன், A.பெரிய கருப்பன், ஆறுமுகம். மற்றும் மாநில, மாவட்ட, ஒன்றிய கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 

No comments:

Post a Comment

Post Top Ad