விக்கிரமங்கலத்தில் 100% வாக்குப்பதிவு உறுதிமொழி. - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Wednesday 27 March 2024

விக்கிரமங்கலத்தில் 100% வாக்குப்பதிவு உறுதிமொழி.


தேனி பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு உசிலம்பட்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட செல்லம்பட்டி ஒன்றியம் விக்கிரமங்கலம் பகுதியில் 100% வாக்களிக்கும் படியும், ஓட்டுக்கு பணம் வாங்க மாட்டோம் என உறுதிமொழி ஏற்று தேர்தல் விழிப்புணர்வு பேரணி மற்றும் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் உசிலம்பட்டி தாசில்தார் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் சுரேஷ் பிரட்ரிக்கிளமண்ட் இந்த நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார். 

விக்கிரமங்கலம் சப்-இன்ஸ்பெக்டர் அசோக் குமார், வருவாய் ஆய்வாளர்சாந்தலட்சுமி, விக்கிரமங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் கலியுக நாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி செயலாளர் பால்பாண்டி வரவேற்றார். கிராம நிர்வாக அலுவலர்கள் முத்துமணி, ஜோதிராஜ், முருகன், ராஜா சக்கரவர்த்த, பவித்ரா, மற்றும் ஊராட்சி செயலாளர்கள், கிராம உதவியாளர்கள், சமூக ஆர்வலர்கள், ஓட்டுச்சாவடி அலுவலர் மற்றும் பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். 


இந்த விழிப்புணர்வு பேரணி விக்கிரமங்கலம் பஸ் நிலையத்தில் தொடங்கி அதே இடத்தில் வந்து நிறைவு பெற்றது. இங்கு பிரச்சாரக் கூட்டம் மற்றும் உறுதிமொழி ஏற்பு நடந்ததது. கிராம உதவியாளர் ராஜேந்திரன் நன்றி கூறினார். 

No comments:

Post a Comment

Post Top Ad