மக்களிடமும் நம்பிக்கை இல்லை தொண்டர்களுடன் நம்பிக்கை இல்லை தானாகவே முன்வந்து எடப்பாடி பழனிச்சாமி பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் - ஓ.பன்னீர்செல்வம் பேச்சு. - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Monday 5 February 2024

மக்களிடமும் நம்பிக்கை இல்லை தொண்டர்களுடன் நம்பிக்கை இல்லை தானாகவே முன்வந்து எடப்பாடி பழனிச்சாமி பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் - ஓ.பன்னீர்செல்வம் பேச்சு.


மதுரை தெப்பக்குளம் அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு மதுரை ஒருங்கிணைந்த மாவட்ட ஆலோசனை கூட்டம் மதுரை மாநகர் மாவட்ட செயலாளர் முன்னாள் எம்பி கோபாலகிருஷ்ணன் தலைமையில் மதுரை தெற்கு மாவட்ட செயலாளர் ஐயப்பன் எம்எல்ஏ மதுரை வடக்கு மாவட்ட செயலாளர் முருகேசன் மாநில எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் வி. ஆர். ராஜ் மோகன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் முன்னாள் முதலமைச்சர் சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓ பன்னீர்செல்வம் பேசுகையில் இந்த மதுரை மண் விசாரணை செய்யாமல் தண்டனை கொடுத்த மன்னனுக்கு பாடம் புகட்டிய மண் என்றும் இந்த மண்ணில் தற்போது நடைபெறும் உரிமை மீட்பு கூட்டத்தில் மக்களும் நம்பவில்லை தொண்டர்களும் நம்பவில்லை என்ற நிலையில் தான் தோன்றித்தனமாக புரட்சித்தலைவர் எம்ஜிஆர் கொண்டு வந்த அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சட்ட விதிமுறைகளை காலில் போட்டு மிதித்து உள்ள எடப்பாடி பழனிச்சாமி தானாகவே முன்வந்து தனது பொதுச் செயலாளர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் அவர் பொறுப்பேற்று பின்பு 8 பொது தேர்தலில் அதிமுக படுதோல்வி அடைந்துள்ளது எனவே மக்களிடம் நம்பிக்கையை எடப்பாடி பழனிச்சாமி இழந்து உள்ளார் என்றும் குற்றம் சாட்டினார்.


மேலும் பாஜக தமிழக மாநில தலைவர் அண்ணாமலை கேட்டுக் கொண்டதின் பேரில் ஈரோடு இடைத்தேர்தலில் நானும் அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வேட்பாளர்களை வாபஸ் பெற்றதனால் தற்காலிகமாக எடப்பாடி பழனிச்சாமிக்கு இரட்டை இலை சின்னம் வழங்கப்பட்டது. இருந்த போதும் மக்கள் அவரை ஏற்றுக் கொள்ளாமல் புரட்சித்தலைவி அம்மா காலத்தில் ஈரோட்டில் ஐந்து சட்டமன்றத் தொகுதியிலும் மாபெரும் வெற்றி பெற்ற அதிமுக இயக்கம் தோல்வியை கண்டது இதற்கு காரணம் எடப்பாடி பழனிச்சாமி தான் என்று குற்றம் சாட்டினார்.


புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை உருவாக்கி நமது இயக்கத்திற்கான சட்ட விதிமுறைகளை கொண்டு வந்து இந்த சட்ட விதிமுறைகளில் காலத்துக்கு ஏற்றது போல் மாற்றங்கள் செய்து கொள்ளலாம் என்று சொல்லியிருந்தார் மேலும் இந்த சட்ட விதிமுறைகளில் ஒரே ஒரு சட்டத்தை மட்டும் எந்த சூழ்நிலையிலும் மாற்றவோ ரத்து செய்யவோ கூடாது என்றும் அந்த சட்ட விதிமுறை கழக பொதுச்செயலாளர் முறை என்பது தொண்டர்கள் தேர்வு செய்ய வேண்டும் என்பதாகும் என்றும் எழுதி வைத்திருந்தார் அந்த சட்ட விதிமுறையை காலில் போட்டு மிதித்து எடப்பாடி பழனிச்சாமி தற்போது தனது பண பலத்தால் 10 மாவட்டச் செயலாளர்கள் முன்மொழிய வேண்டும் 10 மாவட்டச் செயலாளர்கள் வழி மொழிந்தால் போதும் என்ற நிலையை உருவாக்கி இருக்கிறார். எனவே அவருக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும் அவரை இந்த அரசியலில் இருந்தே ஓட ஓட விரட்ட வேண்டும் என்றும் தெரிவித்தார்.


இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் எம் எல் ஏ, கழக துணை ஒருங்கிணைப்பாளர்கள் கு.ப.கிருஷ்ணன், ஜெ.சி.டி.பிரபாகன், பி.ஹேச். மனோஜ் பாண்டியன், கழககொள்கை பரப்பு செயலாளர் புகழேந்தி  மேலவை உறுப்பினர் தர்மர் மற்றும் மதுரை புறநகர் தெற்கு மாவட்ட செயலாளரும் உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான P.அய்யப்பன் தலைமையில் திருமங்கலம் நகர் கழகத்தின் சார்பில் மாவட்ட பொருளாளர் மூ.சி.சோ.ரவி, நகர் கழக செயலாளர் ஒன்றிய கழக செயலாளர், நகர் கழக நிர்வாகிகள், ஒன்றிய கழக நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad