திருமங்கலம் அருகே அருள்மிகு ஸ்ரீ தேவி காளியம்மன் திருக்கோவில் மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Wednesday, 21 February 2024

திருமங்கலம் அருகே அருள்மிகு ஸ்ரீ தேவி காளியம்மன் திருக்கோவில் மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது.


மதுரை மாவட்டம் திருமங்கலம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட  அச்சம்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ தேவி காளியம்மன் திருக்கோவில் மஹா கும்பாபிஷேகம் நேற்று காலை கணபதி ஹோமம் விக்னேஸ்வர பூஜையுடன் ஆரம்பிக்கப்பட்டு யாகசாலையில் பூஜைகள் நடைபெற்றது.காலை 9.30மணிக்கு மேல் 10.30மணிக்குள் கலசத்திற்கு புண்ணிய தீர்த்தங்கள் கொண்டு வரப்பட்டு சிவாச்சாரியர்கள் ஊற்றினார்கள்.


இந்த கும்பாபிஷேக விழாவில் அச்சம்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கிராமமக்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் புனித நீர் தெளித்தனர்.இதற்கான ஏற்பாடுகளை ஊர் பொதுமக்கள் அனைவரும் செய்திருந்தனர். விழாவின் முடிவில் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. 

No comments:

Post a Comment

Post Top Ad