பாரத பிரதமர் நரேந்திர மோடி இன்று தமிழகம் முழுவதும் ரயில்வே மேம்பாலம் கட்டுவதற்க்கான அடிக்கல் நாட்டினார். - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Monday 26 February 2024

பாரத பிரதமர் நரேந்திர மோடி இன்று தமிழகம் முழுவதும் ரயில்வே மேம்பாலம் கட்டுவதற்க்கான அடிக்கல் நாட்டினார்.


தமிழகம் முழுவதும் ரயில்வே மேம்பாலம் அமைப்பதற்காக நாடாளுமன்ற கூட்டத்தொடரில் பாரத பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். அதன் அடிப்படையில் இன்று வீடியோ காணொளி மூலமாக தமிழகம் முழுவதும் உள்ள ரயில்வே மேம்பாலத்திற்கான அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் 41 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் அடிக்கல் நாட்டு விழாவை தொடங்கி வைத்தார். 


மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் உள்ள ரயில் நிலையத்தில் ரயில்வே மேம்பாலத்திற்கான கட்டுமான பணிகள் நடந்து வருகின்றது. இதில் இணைப்பு பாலமும் வருவதால் அதற்கான கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற எதிர் கட்சி துணை தலைவர் ஆர்.பி.உதயகுமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.நகராட்சி தலைவர் ரம்யா முத்துக்குமார், துணை தலைவர் ஆதவன் அதியமான், அதிமுக நகர செயலாளர் ஜே.டி.விஜயன், ஒன்றிய செயலாளர் அன்பழகன் மற்றும் அதிமுக கட்சி நிர்வாகிகள் ரயில்வே கோட்ட பொறியாளர் பாலமுருகன் பா.ஜ.க நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad