மதுரை மாநகராட்சி பூங்காக்கள் பராமரிப்பு பணிகளை, மேயர் இந்திராணி பொன்வசந்த், துவக்கி வைத்தார். - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Friday 2 February 2024

மதுரை மாநகராட்சி பூங்காக்கள் பராமரிப்பு பணிகளை, மேயர் இந்திராணி பொன்வசந்த், துவக்கி வைத்தார்.


மதுரை மாநகராட்சி அறிஞர் அண்ணா மாளிகை சுற்றுச்சூழல் பூங்கா மற்றும் பெரியார் பேருந்து நிலையத்தில் கனரா வங்கி மற்றும் தமிழ்நாடு மெர்க்கண்டல் வங்கி சமூக பொறுப்பு நிதியின் கீழ் பூங்கா பராமரிப்பு பணிகளை,  மேயர் இந்திராணி பொன்வசந்த் , ஆணையாளர் லி.மதுபாலன்,  ஆகியோர் இன்று (01.02.2024)  துவக்கி வைத்து பார்வையிட்டார்கள்.    

மதுரை மாநகராட்சி மண்டலம் 2 வார்டு எண்.31 மாநகராட்சி சுற்றுச்சூழல் பூங்காவில்  தினந்தோறும்  பொதுமக்கள், குழந்தைகள் மற்றும் மூத்த குடிமக்கள் உள்ளிட்டோர்  உடல் நலனை பேணிக்காப்பதற்கு நடைபயிற்சி, யோகா மற்றும் உடற்பயிற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர். குழந்தைகள் தினந்தோறும் சுற்றுச்சூழல் பூங்காவிற்கு மாலை வேளைகளில் விளையாட்டு உபகரணங்களில் விளையாடி செல்கின்றனர். குழந்தைகள் மற்றும் அனைவரின் வசதிக்காக பூங்காவில் இசையுடன் கூடிய நீருற்றும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. 


அனைவரின் வசதிக்காகவும் மேலும் சுற்றுச்சூழல் பூங்காவினை, தனியார் வங்கி சமூக பொறுப்பு நிதியின் கீழ் சிறப்பாக பராமரித்திட திட்டமிடப்பட்டுள்ளது.  கனரா வங்கி சமூக பொறுப்பு நிதியின் கீழ் மண்டலம் 2 வார்டு எண்.31 மதுரை மாநகராட்சி அறிஞர் அண்ணா மாளிகை வளாகத்தில் உள்ள சுற்றுச்சூழல் பூங்காவில் பராமரிப்பு பணிகளை , மேயர், ஆணையாளர் ஆகியோர் துவக்கி வைத்து பணிகள் மேற்கொள்வதை  பார்வையிட்டனர்.  


தொடர்ந்து, மண்டலம் 3 வார்டு எண்.76 பெரியார் பேருந்து நிலையம் பகுதியில் தமிழ்நாடு மெர்க்கண்டல் வங்கி சமூக பொறுப்பு நிதியின் கீழ் கழிப்பறைகள் மற்றும் பூங்காக்கள் பராமரிப்பு பணிகளுக்கான பூமி பூஜை  மேயர் தலைமையில் நடைபெற்றது. அதற்கான பணிகளும் விரைந்து மேற்கொள்ளப்பட உள்ளது. இந்நிகழ்வில், தெற்கு சட்டமன்ற உறுப்பினர் பூமிநாதன், துணை மேயர் தி.நாக ராஜன்,  மண்டலத் தலைவர்கள் பாண்டிச்செல்வி, முகேஷ்சர்மா, தலைமை பொறியாளர் ரூபன்சுரேஷ், கண்காணிப்பு பொறியாளர் அரசு, உதவி ஆணையாளர்கள் சுரேஷ்குமார், ஷாஜகான், மக்கள் தொடர்பு அலுவலர் மகேஸ்வரன், உதவி நகர்நல அலுவலர் மரு.பூபதி. செயற்பொறியாளர் சுந்தரராஜ், உதவி செயற்பொறியாளர்கள் மயிலேறிநாதன், சுப்பிரமணியன், சுகாதார அலுவலர் வீரன், மாமன்ற உறுப்பினர்கள்  முருகன்,  லோகமணி,  கார்த்திக்,  உதவிப்பொறியாளர்கள் சந்தனம்,  ஆறுமுகம், ஸ்டீபன் உட்பட மாநகராட்சி அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர். 

No comments:

Post a Comment

Post Top Ad