சோழவந்தான் தனியார் பள்ளியில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சியில் அசத்திய மாணவ மாணவிகள். - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Wednesday 14 February 2024

சோழவந்தான் தனியார் பள்ளியில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சியில் அசத்திய மாணவ மாணவிகள்.


மதுரை அருகே, சோழவந்தான் எம்.வி.எம். கலைவாணி பள்ளியில், நடைபெற்ற அறிவியல் கண்காட்சியில், பல்வேறு படைப்புகளை செய்து காட்டி அசத்திய சின்னஞ்சிறு குழந்தைகள் ஆர்வமுடன் கண்டு களித்த பெற்றோர்கள் சிறந்த படைப்புகள் உள்ளிட்ட அனைத்து படைப்புகளுக்கும் பரிசுகள் வழங்கிய பள்ளி நிர்வாகம். 

மதுரை மாவட்டம், சோழவந்தான் பசும்பொன் நகரில் கலைவாணி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளி ஆனது கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக சுற்றுப்புற மாணவ மாணவிகளுக்கு சிறந்த கல்வியை ஏற்படுத்தி தருவதுடன், ஒவ்வொரு ஆண்டும் சிறந்த மாணவ மாணவிகளை உயர்கல்விக்காக தயார்படுத்தி வருகிறது.


இந்தப் பள்ளியில், இந்த ஆண்டுக்கான அறிவியல் கண்காட்சி திருவிழா பள்ளியில் நடைபெற்றது. இதற்காக ஒன்றாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவிகள்  தங்களின்  கண்டுபிடிப்புகள் மற்றும் படைப்புகளை அறிவியல் கண்காட்சி மூலம் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களின்பார்வைக்காக வைத்திருந்தனர்.


இதில், இந்திய விண்வெளி ஆராய்ச்சி  நிறுவனத்தின் மாதிரி படம், உலக தலைவர்களின் படங்கள், ராக்கெட் ஏவுதளம் மாதிரி படம், உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹாலின் தத்ருப படம், இயற்கை உணவகத் திருவிழா புகைப்படங்கள்,  ஜல்லிக்கட்டு  காளையை வீரர் அடக்குவது போன்ற தத்ருவ படம், மற்றும் பல்வேறு படைப்புகளை மாணவ மாணவிகள் செய்து வைத்திருந்தனர்.


குறிப்பாக, ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் சின்னஞ்சிறு குழந்தைகள் அதிசயத்தக்க வகையில் படைப்புகளை தயாரித்து வைத்திருந்தனர், இந்த படைப்புகளை பார்வையிட்ட பள்ளியின் தாளாளர் டாக்டர் மருது பாண்டியன், ஒவ்வொரு படைப்புகளையும் தனித்தனியாக பார்வையிட்டு அனைத்து மாணவ மாணவிகளிடமும் அது சம்பந்தமான விளக்கங்களை கேட்டு அவர்களுக்கு பாராட்டுகளை தெரிவித்தார்.


காலை முதல் மாலை வரை நடைபெற்ற அறிவியல் கண்காட்சி படைப்புகளில் சிறந்த படைப்புகளுக்கு முதல் இரண்டு மற்றும் மூன்றாம் பரிசுகளும் மற்றும் கண்காட்சியில் வைத்திருந்த அனைத்து படைப்புகளுக்கும் சிறப்பு பரிசுகளும் பள்ளி நிர்வாகம் சார்பில் வழங்கப்பட்டது .பள்ளி மாணவ மாணவிகள் மத்தியில் பல்வேறு பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் நடைபெற்று வரும் நிலையில், முக்கியமான இந்த அறிவியல் கண்காட்சியானது மாணவ மாணவிகளுக்கு ஒரு புத்துணர்ச்சியையும் கற்றலின் முக்கிய விஷயத்தை உணர்த்துவதாகவும் போட்டி தேர்வுகளுக்கு தங்களை தயார் படுத்தக்கூடிய மனப்பக்குவத்தை ஏற்படுத்துவதாகவும் இருந்தது.


இங்கு வந்து பார்வையிட்ட மற்ற பள்ளியின் பெற்றோர்கள் இதுபோன்று அனைத்து பள்ளிகளிலும் அறிவியல் கண்காட்சியானது நடைபெற வேண்டும் இதற்கு தமிழக அரசு முழு முயற்சி எடுக்க வேண்டும் குறிப்பாக இதுபோன்ற  நிகழ்ச்சிகள் மூலம் மாணவ மாணவிகள் இடையே தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெறுவதற்கு உந்துதலாகவும் போட்டி தேர்வுக்கு தங்களை தயார் செய்யதேவையான ஊக்கத்தை வழங்குவதாகவும் இருக்கும் என்று கூறினர்.


மேலும், கண்காட்சியை ஏற்பாடு செய்த பள்ளி நிர்வாகம் மற்றும் தாளாளருக்கு பெற்றோர்கள் பாராட்டுதல்களை தெரிவித்து சென்றனர். இந்த நிகழ்ச்சியில், பள்ளி முதல்வர் உதவி தலைமை ஆசிரியை மற்றும் ஆசிரியர் ஆசிரியைகள் பெற்றோர்கள் பொதுமக்கள் உட்பட ஏராளமான கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad