வருகின்ற நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆணைக்கிணங்க மதுரை புறநகர் தெற்கு மாவட்ட செயலாளரும் உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான அய்யப்பன் தலைமையில் திருமங்கலத்தில் மாவட்ட பொருளாளர் மூ.சி.சோ.ஆ.ரவி முன்னிலையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு நகர செயலாளர் ஒன்றிய செயலாளர் ஆகியோர் அந்த அந்த வார்டுகளில் மக்களுடன் கலந்து தேர்தல் பணியாற்ற வேண்டும்.மேலும் நாம் ஆளும் கட்சியான திமுக அரசு மக்களை ஏமாற்றும் விதமாக ஆட்சி நடத்தி வருகிறார்கள்.அதை கருத்தில் கொண்டு நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து இந்த தேர்தலில் மாபெரும் வெற்றி பெறவேண்டும் என்று கூறினார்.
இக்கூட்டத்தில் நகர அவைத் தலைவர் காளிதாஸ் வரவேற்பு உரை ஆற்றினார் பொருளாளர் ரவி சிறப்புரையாற்றினார் நகர துணை தலைவர் விஜய பாண்டி நன்றியுரையாற்றினார்.மேலும் சார்பு அணி நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment