திருமங்கலம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கப்பலூர் நாட்டு நலப்பணி திட்டம் சார்பில் ஏழு நாட்கள் ( 23. 2 2024 முதல் 29 .2. 2024 வரை) சிறப்பு முகாம் காந்தி நகர் - உச்சப்பட்டி ஊராட்சி; கப்பலூர் ஊராட்சி பகுதிகளில் சிறப்பாக நடைபெற்றது. - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Thursday 29 February 2024

திருமங்கலம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கப்பலூர் நாட்டு நலப்பணி திட்டம் சார்பில் ஏழு நாட்கள் ( 23. 2 2024 முதல் 29 .2. 2024 வரை) சிறப்பு முகாம் காந்தி நகர் - உச்சப்பட்டி ஊராட்சி; கப்பலூர் ஊராட்சி பகுதிகளில் சிறப்பாக நடைபெற்றது.


திருமங்கலம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கப்பலூர்  நாட்டு நலப்பணி திட்டம் சார்பில் ஏழு நாட்கள் ( 23. 2 2024 முதல் 29 .2. 2024 வரை) சிறப்பு முகாம் காந்தி நகர் - உச்சப்பட்டி ஊராட்சி; கப்பலூர் ஊராட்சி பகுதிகளில் சிறப்பாக நடைபெற்றது.

முகாமின் துவக்க விழாவினை முனைவர் க.லட்சுமி ,முதல்வர் தலைமையுரை நிகழ்த்தி துவக்கி வைத்தார். உச்சப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர்  பிச்சையம்மாள் மற்றும் ரா. கண்ணன் கப்பலூர் ஊராட்சி மன்ற தலைவர் அவர்கள் முன்னிலை வகித்து மாணவப் பருவத்தில் தலைமைப்பண்பையும், சமூக அக்கறையை வளர்த்துக் கொள்வதன் அவசியத்தை எடுத்துரைத்தனர். 


இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக டாக்டர் K. ஜெயக்கொடி அவர்கள் மாணவர்களுக்கு இரத்ததானம் பற்றியும் எய்ட்ஸ் இல்லா சமூகம் குறித்தும் கருத்துரை ஆற்றினார். நாட்டு நலப்பணி திட்ட ஏழு நாள் சிறப்பு முகாமில், சுற்றுச்சூழல் சீரமைப்பு, ஆலயப் பணிகள், சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு, கால்நடை மருத்துவ முகாம், கண்சிகிச்சை முகாம், சூழலியலும்,இயற்கை வேளாண்மையும் என்ற பல்வேறு பொருண்மைகளில் முகாமானது ஒருங்கிணைக்கப்பட்டு பலதுறை வல்லுநர்களும், சமூகப்பணியாளர்களும் சிறப்புரையாற்ற இனிதே நிறைவு பெற்றது. 


தினமும் சமூக விழிப்புணர்வு நாடகங்கள் மற்றும்கலை நிகழ்ச்சிகள், பிளாஸ்டிக் பையை ஒழிப்போம் மீண்டும் மஞ்சப்பையை பயன்படுத்துவோம் குறித்து விழிப்புணர்வு பேரணி, மரக்கன்று நடுதல், பெண்களுக்கான தொழில் முனைவோர் பயிற்சி முகாம் ஆகிய களப்பணிகளை கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட மாணவ, மாணவிகள் சிறப்பாக ஒருங்கிணைத்து செயல்படுத்தினார்கள். முகாமின் நிறைவு விழாவில் G. விஜயகாண்டீபன் காவல் ஆய்வாளர் அவர்கள் மாணவர்களுக்கு வாழ்த்துரை வழங்க முகாமானது நடந்து முடிந்தது.


இச்சிறப்பு முகாமினை நாட்டு நலப்பணி திட்ட அலுவலர்கள் முனைவர் மு. ஜெகநாதன் மற்றும் முனைவர் வே.மீனா ஆகியோர் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

No comments:

Post a Comment

Post Top Ad