மாணவர்கள் வெற்றி பெறும் வரை முயற்சி செய்ய வேண்டும். சென்னை முன்னாள் கலெக்டர் அன்பு செல்வன் பேச்சு. - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Tuesday 30 January 2024

மாணவர்கள் வெற்றி பெறும் வரை முயற்சி செய்ய வேண்டும். சென்னை முன்னாள் கலெக்டர் அன்பு செல்வன் பேச்சு.



மாணவர்கள் வெற்றி  பெறும் வரை முயற்சி செய்ய வேண்டும் என்று, சென்னை மாவட்ட முன்னாள் கலெக்டர் அன்பு செல்வன் பேசினார். இது பற்றிய விவரம் வருமாறு. வில்லாபுரம் ராஜன் மெட்ரிக் பள்ளியின் 29 ஆவது ஆண்டு விழா கலாம் அரங்கில் நடைபெற்றது. 

பள்ளித்தாளாளர் ரவி பார்த்தசாரதி வரவேற்றார். பள்ளி முதல்வர் பாக்ய பிரியா ஆண்டு அறிக்கை வாசித்தார். மதுரையின் அட்சய பாத்திரம் டிரஸ்ட் நிறுவனர் நெல்லை பாலு சிறப்புரை ஆற்றினார். விழாவில், பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவியருக்கும் கடந்த ஆண்டு பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் டூ தேர்வில் சாதனை படைத்த மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கும் பரிசினை வழங்கி சென்னை முன்னாள் மாவட்ட ஆட்சியர் முனைவர். வி. அன்பு செல்வன்  சிறப்புரையாற்றினார். 


அப்போது அவர் பேசியதாவது, கல்வி மட்டும் தான் சமூகத்தை உயர்த்தும். பொருளாதார ரீதியில் நாகரிகத்தில் தலை நிமிரச் செய்யும். கல்வி சேவை சிறப்பானது. வகுப்பறையில் இரண்டு விதமான மாணவர்கள் இருப்பார்கள். என்னால் முடியும் என்று சிலர்  என்னால் மதிப்பெண் எடுக்க முடியவில்லயே என்ற ஏக்கத்தோடு இருப்பவர்கள் சிலர். உங்கள் மனக்குழப்பத்தை, நம்மால் முடியுமா என்று தயக்கத்தை தள்ளி விடுங்கள். எல்லோருக்கும் படிப்பு வரும். முயற்சி செய்து பாருங்கள். தயக்கத்தை தூர வைத்து விடுங்கள். 


வெற்றி பெறும் வரை முயற்சி செய்ய வேண்டும். மனதுக்கும் அறிவுக்கும் போராட்டம் வரும். மனதா, அறிவா என்று நீங்கள்தான் தீர்மானிக்க வேண்டும். வாழ்க்கையில் ஒழுக்கத்தோடு இருக்க வேண்டும். கவனச் சிதறல்களை தவிர்க்க வேண்டும். வலிகளை வாழ்க்கையில் தாங்கிக் கொள்ள பழக வேண்டும். நிறைய ஆசைப்படுங்கள். தகுதி தானாக வரும். அவமானம் வந்தாலும் அது வெகுமானமாக கருதிக் கொண்டு  உழைக்க வேண்டும். இவ்வாறு சென்னை மாவட்ட முன்னாள் ஆட்சியர் அன்பு செல்வன் பேசினார். 


நிகழ்ச்சியில், பள்ளி நிறுவனர் ரங்கராஜன், கோஆப் டெக்ஸ் முன்னாள் அதிகாரி மணிவண்ணன், முன்னாள் கவுன்சிலர் செல்லம், நளினி பாலசுப்பிரமணியன் உட்பட பலர் பங்கேற்றனர்.  விழாவுக்கான ஏற்பாடுகளை, வில்லாபுரம் ராஜன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி  தாளாளர் ரவி பார்த்தசாரதி  செய்திருந்தார். 

No comments:

Post a Comment

Post Top Ad