நாட்டின் 75 ஆவது குடியரசு தினத்தை நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். மதுரை மாவட்டம் திருமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தில் ஒன்றிய குழு தலைவர் லதா ஜெகன் தேசிய கொடியேற்றி மரியாதை செலுத்தினார். இதில் துணைத் தலைவர் வளர்மதி ஒன்றிய செயலாளர் அன்பழகன் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அலுவலக பணியாளர்கள், ஆகியோர் கலந்து கொண்டனர். அதேபோல் திருமங்கலம் நகராட்சியில் நகர்மன்ற தலைவர் ரம்யா முத்துக்குமார் தேசியக்கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார்.
இதில் துணைத் தலைவர் ஆதவன் அதியமான் நகரச் செயலாளர் ஸ்ரீதர் மற்றும் நகர் மன்ற கவுன்சிலர்கள் ஆணையாளர் சுகாதார ஆய்வாளர்கள் அலுவலகப் பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் மனேஷ்குமார், தேசிய கொடி மரியாதை செலுத்தினார். வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் கோட்டாட்சியர் சாந்தி தேசியக் கொடியேற்றி மரியாதை செலுத்தினார். சிறைச்சாலையில் ஜெய்லர் பரணிதரன் தேசியக்கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார் அங்கே இருக்கும் கைதிகளுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.
நகர் காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளர் லட்சுமி லதா தேசிய கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார். மற்றும் பல்வேறு சுற்றுப்பகுதிகளில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது.
No comments:
Post a Comment