ஆபத்தை விளைவிக்கக் கூடிய மரத்தை அகற்ற கோரிக்கை. - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Friday, 19 January 2024

ஆபத்தை விளைவிக்கக் கூடிய மரத்தை அகற்ற கோரிக்கை.


மதுரை கோச்சடை, மேலக்கால் மெயின் ரோடு பகுதியில் இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்க் எதிர்ப்புறம் உள்ள வாகை மரத்தை நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கடந்த சில வருடங்களுக்கு முன்பாக அருகில் உயர் அழுத்த மின் கம்பி சென்று கொண்டிருந்ததால், அந்த மரத்தின் மேல்பகுதியை வெட்டி உள்ளனர்.

தற்போது, அந்த மரத்தை கரையான் அரித்து ஆபத்தான நிலையில் கீழே விழும் சூழ்நிலையில் உள்ளது. மேலும், உயர் அழுத்த மின் மின் வயர்கள் அந்த மரத்தின் அருகே செல்வதால், அந்த மின் வயர்களில் அந்த மரம் விழும் சூழ்நிலை உள்ளது. எனவே, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் உடனடியாக ஆபத்தை விளைவிக்க கூடிய நிலையில் உள்ள அந்த மரத்தை, அகற்ற வேண்டும் என்பதே, அந்தப் பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது. 

No comments:

Post a Comment

Post Top Ad