அவனியாபுரம் ஊராட்சி ஒன்றிய பள்ளியில் ஆய்வு செய்த மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா மாணவர்களுடன் கலந்துரையாடல். - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Friday 5 January 2024

அவனியாபுரம் ஊராட்சி ஒன்றிய பள்ளியில் ஆய்வு செய்த மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா மாணவர்களுடன் கலந்துரையாடல்.


மதுரை அவனியாபுரம் ஊராட்சி ஒன்றிய பள்ளியில் ஆய்வு செய்த மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா மாணவர்களிடம் தங்களுக்கு எந்த பாடம் பிடித்துள்ளது எவ்வாறு படிக்கிறீர்கள் என கேள்வி எழுப்பினார் மேலும் அருகில் இருந்த மேயர் யார் என கேட்க மாணவர்கள் கலெக்டர் எனக் கூறியதும் கலெக்டர் சங்கீதா மிகவும் மகிழ்ச்சி அடைந்தார் .தன்னைப் பற்றியும் மாணவர்கள் தெரிந்து இருப்பதால் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது என நெகிழ்ச்சியாக கூறினார். 

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டிக்கான வாடிவாசல் மற்றும் மாடு பிடி வீரர்கள் பரிசோதனை மையம். ஜல்லிக்கட்டு போட்டியில் காயம்பட்ட மாடு பிடி வீரர்கள்  முதலுதவி மையம் இவற்றை பார்வையிட்ட மாவட்ட ஆட்சித்தலைவர் சங்கீதா மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி ஆகியோர் அருகில் இருந்த ஆறாம் வகுப்பு பள்ளி மாணவர்களிடம் கலந்துரையாடினர் அவனியாபுரம் ஊராட்சி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ப்ளோரன்ஸ் மேரி ஆறாம் வகுப்பு மாணவர்களுக்கு பாடம் நடத்திக் கொண்டிருந்தார். 


அப்போது ஆய்வு செய்ய வந்த மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா ஏன் ஒரு மின்விளக்கு மட்டும் இருக்கிறது மற்ற விளக்குகளை போடலாமே என கேட்டார். அப்போது தலைமை ஆசிரியர் ப்ளோரன்ஸ் மேரி மழை பெய்துள்ளதால் சுவர் ஈரமாக இருந்து . சுவரில் மின்சாரம் பாய்ந்து ஷாக்அடிக்கிறது எனக் கூறினார். 


அதனை அடுத்து மாநகராட்சி அதிகாரிகளிடம் மாவட்ட ஆட்சியர் சங்கீதா சுவர் ஈரமாக உள்ளது அதற்கு உடனடியாக சரி செய்ய வேண்டும் என்றும் கூடுதலாக மின்விளக்கு பொருத்த வேண்டும் என கூறினார் மேலும் மாணவர்களிடம் எவ்வாறு படிக்கிறீர்கள் அனைத்து படங்களும் பிடித்துள்ளதா என கேள்விகள் கேட்டார். 


அதனைத் தொடர்ந்து மேயர் இந்திராணி கூறும்போது இவர் யார் என்று தெரிகிறதா என மாணவர்களிடம் கேட்டார். அதனைத் தொடர்ந்து மாணவர்கள் கலெக்டர் எனக் கூறினர் அதனையடுத்து மாணவர்கள் நன்றாக படித்து கலெக்டராக வேண்டும் என மேயர் இந்திராணி கூறினார். தன்னை பற்றி மாணவர்கள் தெரிந்து இருப்பதால் மிகவும் சந்தோசம் எனக் கூறி மகிழ்ச்சி அடைந்தார். 

No comments:

Post a Comment

Post Top Ad