ஒவ்வொரு மாணவ மாணவியர்களுக்கும் இரண்டாவது ஆசிரியராக பெற்றோர்கள் இருக்க வேண்டும். - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Tuesday 30 January 2024

ஒவ்வொரு மாணவ மாணவியர்களுக்கும் இரண்டாவது ஆசிரியராக பெற்றோர்கள் இருக்க வேண்டும்.


மதுரை ஒத்தக்கடை வேலம்மாள் குளோபல் மருத்துவமனை வளாகத்தில் கல்வித் துறை சார்பில் பெற்றோர் ஆசிரியர் கழக மண்டல மாநாட்டை அமைத்த உதயநிதி ஸ்டாலின் காணொளி மூலமாக துவக்கி வைத்தார்.

அமைச்சர் மூர்த்தி துணைச் செயலாளர் குமரகுருபரன் முன்னிலை வகித்தனர் பி டி ஏ துணைத்தலைவர் முத்துக்குமார் வரவேற்பு உரை ஆற்றினார் இயக்குனர்கள் அறிவொளி கண்ணப்பன் நாகராஜ முருகன் மாவட்ட ஆட்சியர் சங்கீதா துணை இயக்குனர்கள் ஆஞ்சலோ இருதயசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி பேசியதாவது ஆசிரியர்களுக்கும் பெற்றோர்களும் சேர்ந்து தான் நல்ல மாணவரை உருவாக்க முடியும் அறிவு சார்ந்த குழந்தைகளை வளர்க்க வேண்டும். கலைஞர் நூற்றாண்டு நூலகம் மூலமாக ஏராளமான மாணவர்கள் மாணவிகள் போட்டித் தேர்வுகளுக்கு தயாராகி வருகின்றனர் உயர்கல்வியில் மாணவர்கள் சேர்க்கை அதிகரித்துள்ளது இதற்கு காரணம் அரசின் திட்டங்களும் பெற்றோர்களின் ஒத்துழைப்பு மிக்க காரணம் பெற்றோர்கள் பிள்ளைகளை வளர்ப்பதில் இரண்டாவது ஆசிரியராக இருக்க வேண்டும் காமராஜர் ஆட்சி போல் பல திட்டங்களை உருவாக்கி வருகின்றனர் திமுக மதுரை உள்ளிட்ட ஆறு மாவட்டங்களை சேர்ந்த பெற்றோர் ஆசிரியர்கள் பங்கேற்றனர் 117 நன்கொடையாளர்களுக்கு விருதுகளும் வழங்கப்பட்டது. சி.இ. ஓ கார்த்திகா நன்றி கூறினார். 

No comments:

Post a Comment

Post Top Ad