முதலைக்குளம் ஊராட்சியில், துணை சுகாதார நிலையம் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை. - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Wednesday 3 January 2024

முதலைக்குளம் ஊராட்சியில், துணை சுகாதார நிலையம் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை.


மதுரை மாவட்டம், விக்கிரமங்கலம் அருகே முதலைக்குளம் ஊராட்சியில் 9 வார்டுகள் உள்ள நிலையில் தலைவராக பூங்கொடி பாண்டி துணைத் தலைவராக ரேவதி பெரிய கருப்பன் ஊராட்சி செயலாளராக பாண்டி ஆகியோர் செயல்பட்டு வருகின்றனர்.

இந்த ஊராட்சிக்கு உட்பட்ட முதலைக்குளம் கீழப்பட்டி கொசவபட்டி எழுவம்பட்டி உள்ளிட்ட கிராமங்களை சேர்த்து சுமார் 5000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசிக்கின்றனர். இவர்கள் தங்களின் மருத்துவ தேவைகளுக்காக அருகில் 5 கிலோமீட்டர் தொலைவில் உள்ள விக்கிரமங்கலம் 10 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள செக்கானூரணி ஆகிய பகுதிகளுக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளதாக  தெரிவிக்கின்றனர். ஆகையால், இந்த ஊராட்சிக்கு உட்பட்ட கிராமங்கள் பயன்பெறும் வகையில் முதலை குளத்தில் துணை சுகாதார நிலையம் அமைக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். 


சுகாதார நிலையம் இல்லாததால், தற்காலிகமாக முதலைக் களத்தில் உள்ள நூலகத்தில் மருத்துவ பரிசோதனைகள் நடைபெறுவதால், இட நெருக்கடி ஏற்படுவதாகவும் நூலகத்தை பயன்படுத்துவர்கள் மிகுந்த சிரமத்திற்கு  உள்ளாவதாகவும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். ஆகையால், அரசு பொதுமக்களின் நலன் கருதி விரைவில் துணை சுகாதார நிலையம் அமைத்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு விட வேண்டுமென, கேட்டுக் கொண்டுள்ளனர்.

No comments:

Post a Comment

Post Top Ad