உசிலம்பட்டி முன்னாள் எம்எல்ஏ பி.வி கதிரவன் பிறந்தநாள் விழா. - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Tuesday 2 January 2024

உசிலம்பட்டி முன்னாள் எம்எல்ஏ பி.வி கதிரவன் பிறந்தநாள் விழா.


அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் தேசிய துணைத் தலைவர் தமிழ் மாநில பொதுச்செயலாளர் முன்னாள் எம்.எல்.ஏ. டாக்டர் பிவி கதிரவன் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு, மாநிலத் தலைவர் முத்துராமலிங்கம் தலைமை தாங்கினார். மாநிலச்செயலாளர் பசும்பொன், மாநில தொழிற்சங்க செயலாளர் வழக்கறிஞர் திருப்பதி, மாநில மாணவரணி செயலாளர் பாஸ்கரபாண்டியன், மாநில இளைஞரணி தலைவர் அசோக் அம்பலம், டாஸ்மாக் தொழிற்சங்க மாநிலச் செயலாளர் வடிவேல், மாநில மகளிரணி தலைவி தங்கம், மாநிலச் செயலாளர் லட்சுமிமாயாண்டி, மாநில துணைச் செயலாளர் வழக்கறிஞர் தமிழ்செல்வி, மாநிலகுழு உறுப்பினர் சரஸ்வதி, மாநிலவிவசாய அணி செயலாளர் எவரெஸ்ட் பால்சாமி, கம்பூர்சேகர் மற்றும் மதுரை மாநகர மாவட்டச் செயலாளர் சிவபாண்டியன், ஆலத்தூர்மணி, ஆசைகுமார் மற்றும் மாநகர் இளைஞரணி கார்த்திக், ராஜேஸ் கண்ணன் அபி, வடக்கு தொகுதி தலைவர் ஷாம், செயலாளர் பிரவீண் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பு செய்தனர்.

மதுரை மேற்கு மாவட்டத்தின் சார்பாக, மாவட்டத் தலைவர் பொன் ஆதிசேடன் தலைமையில் மாபெரும் அன்னதானம் நடைபெற்றது. செல்லம்பட்டி ஒன்றியச் செயலாளர் குபேந்திரன், வடக்கு ஒன்றியச் செயலாளர் மகாராஜன், பெரியதேவர், தேவராஜ், மகளிரணி சார்பாக மாவட்ட செயலாளர் சாவித்திரி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜெயப்பிரியா, மேற்குமாவட்ட செயலாளர் ஈழச்செல்வி, ஜெயந்தி, தாரணியா, ரோகிணி , மாணவரணி சார்பாக விக்னேஷ் ,வினோத், ராமர் ,பாலா, சுபாஷ், கிருஷ்ணன், புஷ்பராஜ் ,தினேஷ், அஜய் , தொழிற்ச்சங்கம் சார்பாக ராமர் அன்புராஜன், மணிகண்டன் மற்றும் அனைத்து மாவட்டத்திலிருந்தும் முக்கிய நிர்வாகிகள் கலந்து சிறப்பித்தனர். இறுதியாக, மாநில பொதுச்செயலாளர் பி.வி. கதிரவன், மாநகர் மாவட்டம் சார்பாக கிரேன் மூலமாக மாலை அணிவித்து வாழ்த்துகளை தெரிவித்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad