வாடிப்பட்டி பகுதியில் குடியரசு தினவிழா. - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Sunday 28 January 2024

வாடிப்பட்டி பகுதியில் குடியரசு தினவிழா.


மதுரை அருகே, வாடிப்பட்டி பகுதியில் 75வது குடியர சு தினவிழா கொண்டாடப்பட்டது. மதுரை மாவட்டம், வாடிப்பட்டி உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு ,நீதிபதி வேங்கடலெட்சுமி தலைமை தாங்கி தேசிய கொடி ஏற்றி இனிப்பு வழங்கினார்.

வழக்கறிஞர் சங்கதலைவர் முத்துமணி, செயலாளர் பாலகிருஷ்ணன்,  அரசுவழக்கறிஞர் பார்த்தசாரதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் தலைவர் செல்வக்குமார்  வரவேற்றார். இதில், வழக்கறிஞர் சங்க நிர்வாகிகள் சிவராமன், தங்கபாண்டி, பசீர் அகமது, துரைமுருகன், தயாநிதி, ராஜாஜி, பாக்யராஜ், கார்த்திக்,குரு மற்றும் நீதிமன்ற ஊழியர்கள் கலந்து கொண்டனர். முடிவில், முன்னாள் செயலாளர் முத்துராமலிங்கம்   நன்றி கூறினார்.  


வாடிப்பட்டி வட்டாரக்கல்விஅலுவலகத்தில் வட்டாரக்கல்வி அலுவலர் அகிலத்துஇளவரசி தலைமை தாங்கினார். கண் காணிப்பாளர் டேவிட் கிறிஸ்டோபர் முன்னிலை வகித்தார். வட்டாரக்கல்வி அலுவலர் ஷாஜஹான் கொடியேற்றிஇனிப்பு வழங்கினார். வாடிப்பட்டி பேரூராட்சியில், நடந்த நிகழ்ச்சிக்கு பேரூராட்சித் தலைவர் பால்பாண்டியன் தலைமை தாங்கி, கொடியேற்றி இனிப்பு வழங்கினார். 


துணைத் தலைவர் கார்த்திக் முன்னிலை வகித்தார். செயல்அலுவலர் ஜெயலட்சுமி வரவேற்றார். இதில், பேரூராட்சி கவுன்சிலர்கள், அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டனர். முடிவில், இளநிலை உதவியாளர் முத்துபாண்டி நன்றி கூறினார். பரவை பேரூராட்சியில், பேரூராட்சித் தலைவர் கலா மீனா ராஜா தலைமை தாங்கி, கொடி ஏற்றினார். துணைத் தலைவர் ஆதவன் முன்னிலை வகித்தார். செயல் அலுவலர் செல்வகுமார் வரவேற்றார். இதில், கவுன்சிலர்கள்,அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டனர். முடிவில், கவுன்சிலர் சௌந்தரபாண்டியன் நன்றி கூறினார். வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய சேர்மன் மகாலட்சுமி ராஜேஷ் கண்ணன் தலைமை தாங்கி கொடி ஏற்றி இனிப்பு வழங்கினார். யூனியன் கமிஷனர் ரத்னகலாவதி முன்னிலை வகித்தார்.

தாதம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் தலைமைஆசிரியர் கிறிஸ்டிகலைச் செல்வி தலைமை தாங்கினார். முன்னாள் கவுன்சிலர் திருச்செல்வி முன்னிலை வகித்தார். கவுன்சிலர் பூமிநாதன் கொடியேற்றிஇனிப்பு வழங்கினார். இதில், ஆசிரியர்கள் மகேஸ்வரி, வசந்தா மற்றும் மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.  பொட்டுலுப்பட்டியில் அரசுஉதவிபெறும் காந்திஜி ஆரம்பப்பள்ளியில் தலைமை ஆசிரியர் வெங்கடலெட்சுமி தலைமைதாங்கினார். கல்விக்குழுதலைவர் பொறியாளர் தனபால் முன்னிலை வகித்தார். ஆசிரியர் ஆசீர்வாதம் பீட்டர் வரவேற்றார். பள்ளி செயலாளர் நாகேஸ்வரன் கொடியேற்றிஇனிப்பு வழங்கினார். இதில் பேச்சு,கவிதை, மாறுவேடபோட்டிகள், ஒயிலாட்டம், நாடகங்களில் கலந்துகொண்ட மாணவ-மாணவிகளுக்கு சௌந்தர் பால்பாண்டி பரிசுகள் வழங்கினர். முடிவில் ஆசிரியர் சுதா எஸ்டர்டார்த்தி நன்றி கூறினார்.

No comments:

Post a Comment

Post Top Ad