சோழவந்தானில், ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு கோவில்களில் குவிந்த பக்தர்கள் போக்குவரத்து சிக்கலில் சிக்கித் தவித்த வாகனங்கள். - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Monday 1 January 2024

சோழவந்தானில், ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு கோவில்களில் குவிந்த பக்தர்கள் போக்குவரத்து சிக்கலில் சிக்கித் தவித்த வாகனங்கள்.


மதுரை மாவட்டம், சோழவந்தான் பகுதி கோவில்களில், ஆங்கில புத்தாண்டை ஒட்டி பக்தர்கள் குவிந்தனர். போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் செல்ல சிரமப்பட்டன. சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. 

ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு, இக்கோவிலில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் வருகை புரிந்து அம்மனை தரிசித்தனர். மாரியம்மன் சன்னதியில் வாகனப் போக்குவரத்து இருப்பதால், கோயிலுக்கு வரும் பக்தர்கள் கார் மற்றும் இருசக்கர வாகன வாகனங்களை நிறுத்துவதற்கு சிரமப்பட்டனர். ஏற்கனவே, பக்தர்கள் மாரியம்மன் கோவில் சன்னதி ரோட்டை ஒருவழி பாதையாக மாற்ற போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டு வருகின்றனர். சாதாரண செவ்வாய் வெள்ளிக்கிழமை போன்ற நாட்களில் கூட மாரியம்மன் சன்னதி ரோட்டில் போக்குவரத்தில் நெரிசல் ஏற்பட்டு வருகிறது.


இதனால், இப்பகுதி பொதுமக்களும் பக்தர்களும் மாரியம்மன் சன்னதி ரோட்டை ஒருவழி பாதையாக கடைப்பிடிக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டு வந்த நிலையில், தற்போது புத்தாண்டை ஒட்டி கோவிலுக்கு பக்தர்கள் அதிகமாக வந்ததால் அவர்களுடைய வாகனங்கள் நிறுத்தியதில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் சிக்கித் தவித்தன.


இதனால், பொதுமக்கள் பக்தர்கள் மிகவும் சிரமப்பட்டனர். மாரியம்மன் கோவில் வழியாக செல்லக்கூடிய வாகனங்கள் தடை செய்யப்பட்டு மார்க்கெட் ரோடு வழியாக பஸ் நிலையம் சென்று வட்டப் பிள்ளையார் கோவில் வழியாக செல்வதற்கு உரிய நடவடிக்கை எடுத்து, அடிக்கடி ஏற்படக்கூடிய போக்குவரத்து நெரிசலை சரி செய்ய வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர். மேலும், மாரியம்மன் கோவில் பகுதிகளில் ஆட்டோக்கள் வரிசையாக நிறுத்தப்படுவதால், பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். 


அதேபோல, காமராஜர் சிலை அய்யனார் பொட்டல், ஆற்றுப்பாலம் ஆகிய பகுதிகளில் சாலைகளில் ஆட்டோக்கள் நிறுத்தி பயனடைய ஏற்றுவதால், பயணிகளுக்கு இடையூறு ஏற்படுகிறதாம். சோழவந்தான் கடைவீதிப் பகுதிகளில், போலீசாருக்கு தெரிந்தே ஆட்டோக்கள் சாலையில் நிறுத்தப்பட்டு, பயணிகளை ஏற்றி வருகின்றனர். இதுகுறித்து, பல புகார்கள் காவல் நிலையத்தில் சென்றும், போலீசார் ஆட்டோ இயக்குவதே ஒழுங்குபடுத்த ஆர்வம் காட்டவில்லை என, கூறப்படுகிறது.


இது குறித்து ,மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உரிய நடவடிக்கை எடுத்து, சோழவந்தான் மாரியம்மன் கோயில் அருகே   ஆட்டோக்கள் நிறுத்தப்படுவதை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர். ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு, சோழவந்தான் ஜெனக நாராயண பெருமாள் கோவில், திரௌபதி அம்மன் கோவில், பிரளய நாத சுவாமி கோவில், சனீஸ்வர பகவான் கோவில் ,அருணாசல ஈஸ்வரர் ஆலயம், திருவேடகம் ஏடகநாதர் சுவாமி கோவில், தச்சம்பத்து சதுர்வேத விநாயகர் கோவில், ஆறுமுகம் கோவில், தென்கரை அகிலாண்ட ஈஸ்வரி சமேத மூல நாத சுவாமி கோவில், குருவித்துறை சித்திர ரத வல்லப பெருமாள் மற்றும் குருபகவான் கோவில் உள்பட இப்பகுதியில் கோவில்களில் பக்தர்கள் குவிந்தனர்.

No comments:

Post a Comment

Post Top Ad