சோழவந்தான்எம்விஎம் கலைவாணி பள்ளியில் நாட்டின் 75 வதுகுடியரசு தின விழா. - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Friday, 26 January 2024

சோழவந்தான்எம்விஎம் கலைவாணி பள்ளியில் நாட்டின் 75 வதுகுடியரசு தின விழா.


மதுரை மாவட்டம் சோழவந்தான் பசும்பொன் நகரில் அமைந்துள்ளஎம் வி எம் கலைவாணி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற குடியரசு  தின விழாவில் பள்ளியின் தாளாளர் எம் வி எம் மருது பாண்டியன் தேசிய கொடி ஏற்றி பள்ளி மாணவ மாணவிகளுக்கு இனிப்புகள் வழங்கினார் இதில் எம் வி எம் குழும தலைவரும்  தொழிலதிபருமான மணி முத்தையா வள்ளி மயில் மற்றும்  பள்ளி முதல்வர் செல்வம் மற்றும் ஆசிரியர் ஆசிரியைகள் மாணவ மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

குடியரசு தின விழாவை முன்னிட்டு மாணவ மாணவிகளின் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது இதில் கட்டுரை போட்டி பேச்சு போட்டி இலக்கியப் போட்டி போன்ற  தனித்திறனை நிரூபிக்கும்  போட்டிகள் நடைபெற்றது தொடர்ந்து மாணவ மாணவிகளின் மாறுவேட போட்டிகள் நடைபெற்றது இதில் சுதந்திரத்திற்காக பாடுபட்ட தியாகிகளின் உருவம் தாங்கி மாணவ மாணவிகள் மேடையில் வந்து தங்களது  திறமை வெளிப்படுத்தினர்  குடியரசு தின விழா போட்டிகளில் கலந்து கொண்டஅனைவருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது பல்வேறு பகுதிகளிலிருந்து பொதுமக்கள் மற்றும் பெற்றோர்கள் ஏராளமானோர்  கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad