மதுபானக்கூடாக மாறிய, அதிமுக முன்னாள் அமைச்சர் நிதியின் கீழ் கட்டப்பட்ட பயணியர் நிழற்குடை; பயனற்ற இடத்தில் மக்கள் வரிப்பணம் ரூபாய் 5 லட்சம் வீண் - அங்கன்வாடி மைய கட்டிடத்திற்கு அருகில் மதுபானமாக மாறிய நிழற்குடையால் அவலம். - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Tuesday, 23 January 2024

மதுபானக்கூடாக மாறிய, அதிமுக முன்னாள் அமைச்சர் நிதியின் கீழ் கட்டப்பட்ட பயணியர் நிழற்குடை; பயனற்ற இடத்தில் மக்கள் வரிப்பணம் ரூபாய் 5 லட்சம் வீண் - அங்கன்வாடி மைய கட்டிடத்திற்கு அருகில் மதுபானமாக மாறிய நிழற்குடையால் அவலம்.


மதுரை மாவட்டம், திருமங்கலத்தை அடுத்த புளியம்பட்டி கிராமத்தில், இந்த தொகுதியின் எம்.எல்.ஏ.வும், முன்னாள் அதிமுக அமைச்சருமான ஆர்.பி. உதயகுமார் - ன் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ்ரூபாய் 5 லட்சம் செலவில், பயனற்ற இடத்தில் கட்டப்பட்டுள்ள பயணியர் நிழற்குடை , மதுபான கூடமாக மாறியுள்ளதாம்.

நிழற்குடை உட்புறம் முழுவதும் மதுபான பாட்டில்களும், பிளாஸ்டிக் டம்ளர் மற்றும் குப்பை கூளங்களாக காட்சி அளிப்பதால் , அதன் அருகில் 50 பிஞ்சு குழந்தைகள் கல்வி பயிலும் அங்கன்வாடி மையம் அமைந்துள்ளது மிகுந்த வேதனைக் குரியதாக உள்ளது. பயனற்ற இடத்தில் ரூபாய் 5 லட்சம் செலவில் கட்டப்பட்ட பயணியர் நிழற்குடை வீணடிக்கப்பட்டுள்ளது.                  


மாலை மற்றும் இரவு நேரத்தில், அக் கிராமத்தைச் சார்ந்த இளைஞர்கள் இந்த நிழற்குடையை மதுபான கூடமாக பயன்படுத்தி வருவதால், கிராமத்து பெண்கள் மற்றும் சிறுமிகள்  அவ்வழியே செல்ல அச்சமடைந்துள்ளனர், இது குறித்து ஊராட்சி நிர்வாகம் மற்றும் காவல்துறையினர் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்துடன் மக்கள் பயன்பாடு உள்ள இடங்களில், மதுபிரியர்கள், பொது இடங்களில் மது அருந்துவதை திருமங்கலம் போலீஸார் கட்டுப்படுத்த வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

No comments:

Post a Comment

Post Top Ad