வாடிப்பட்டியில், தேமுதிகவினர் மவுன ஊர்வலம். - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Friday, 29 December 2023

வாடிப்பட்டியில், தேமுதிகவினர் மவுன ஊர்வலம்.


தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் மறைவுவையொட்டி, வாடிப்பட்டி பேரூர் தேமுதிக கழகம் சார்பாக, மௌன அஞ்சலி மற்றும் அமைதி ஊர்வலம் நடைபெற்றது.

தேமுதிக நிறுவன தலைவர் கேப்டன் விஜயகாந்த்  மறைவுக்கு, வாடிப்பட்டி பேரூர் கழகம் சார்பாக மௌன அஞ்சலி மற்றும் அமைதி ஊர்வலம் நடைபெற்றது. வாடிப்பட்டி பேரூர் கழக செயலாளர் பாலாஜி தலைமை வகித்தார். சோமநாதன் தமிழ் முருகன் ,பி .பி. முருகன், ஏ .கே. மூர்த்தி ,அறிமலை கார்த்தி மற்றும் முன்னாள் பேரூராட்சி செயலாளர்கள் மாரியப்பன், ஜெயராஜ், முத்துப்பாண்டி, வக்கீல் முருகன் ,சங்கு பிள்ளை, மற்றும் மாவட்ட துணைச் செயலாளர் தங்கராஜ் மாவட்ட அவைத்தலைவர் கர்ணன்,ஒன்றிய செயலாளர்கள் முத்துப்பாண்டி, தெய்வேந்திரன், ஒன்றிய நிர்வாகிகள் நாகராஜ் பெருமாள் சத்திய லிங்கேஸ்வரன், மகளிர் அணி ஒன்றிய செயலாளர் நிர்மலா தேவி, மாவட்ட மாணவரணி செயலாளர் அருண் மற்றும் பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டு விஜயகாந்தின் திருவுருவ படத்திற்கு அஞ்சலி செலுத்தினர். 

No comments:

Post a Comment

Post Top Ad