தேய்பிறை பஞ்சமி வராகி அம்மனுக்கு சிறப்பு பூஜை: மஹா யாகம். - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Saturday 2 December 2023

தேய்பிறை பஞ்சமி வராகி அம்மனுக்கு சிறப்பு பூஜை: மஹா யாகம்.

மதுரை மேலமடை தாசில்தார் நகர் அருள்மிகு சவுபாக்கிய விநாயகர் ஆலயத்தில், தேய்பிறை பஞ்சமி முன்னிட்டு, வராகி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. திருக்கோவிலிலே, மாதந்தோறும் வளர்பிறை மற்றும் தேய்பிறை பஞ்சமி நாட்களில், இக்கோவில் அமைந்துள்ள வராகி அம்மனுக்கு பக்தர்கள் சார்பில் சிறப்பு யாகமும், அதைத் தொடர்ந்து, அபிஷேகம், அலங்காரம் சிறப்பு  பூஜைகள் தொடர்ந்து காலை 9 மணி அளவில் நடைபெற்று வருகிறது.

இன்று தேய்பிறை  பஞ்சை முன்னிட்டு, இக்கோயில் அமைந்துள்ள வராகி அம்மன் சன்னதியில், சிவாச்சாரியார்களால் சிறப்பு யாகங்கள் நடத்தப்பட்டு, பூஜைகள் நடந்தது. இதில், பெண்கள் பங்கேற்று எலுமிச்சம் தீபம் ஏற்றி வராஹி அம்மனை வழிபட்டனர். பலர், வராகி அம்மனுக்கு மஞ்சள் மாலை அணிவித்து சிறப்பு பிரார்த்தனையை நடத்தினர்.


இதை அடுத்து, கோயில் நிர்வாகத்தின் சார்பில் பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை, ஆலய நிர்வாக குழுவினர், மற்றும் பெண்கள் ஆன்மீக குழுவினர் செய்தனர். இத்திருக்கோவிலே, வாரந்தோறும் வெள்ளிக்கிழமை அன்று காலை 11 மணியளவில் வராகி மற்றும் துர்க்கை அம்மனுக்கு பெண்கள் குழுவின் சார்பில் சிறப்பு அபிஷேகங்கள் நடந்து வருகிறது.


No comments:

Post a Comment

Post Top Ad