மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் தாலுகா, அவனியாபுரம் பகுதியில் தை திரு நாள் பொங்கல் முதல் நாள் அன்று ஜல்லிக்கட்டு நடைபெறுவது வழக்கம்.

இதனை ஒட்டி, பாதுகாப்பு பணிகளுக்காக மதுரை மாநகர காவல் ஆணையர் லோகநாதன் ஜல்லிக்கட்டு நடைபெறும் வாடிவாசல் பகுதி திருப்பரங்குன்றம் சாலையில் உள்ள தற்காலிக கால்நடை மருத்துவமனைகள் ஜல்லிக்கட்டு மாடுகள் பரிசோதனை பகுதி மற்றும் வாகனங்கள் செல்லும் திருப்பரங்குன்றம் சாலை ,முத்துப்பட்டி சாலை, வெள்ளக்கல் பகுதி ஆகிய இடங்களில் பார்வையிட்டு ஆய்வு செய்து, போக்குவரத்து மற்றும் கண்காணிப்பு குறித்து மதுரை மாநகர காவல் ஆணையர் லோகநாதன் ஆய்வு செய்தார்.
திருப்பரங்குன்றம் காவல் உதவி ஆணையர் செல்வகுமார், அவனியாபுரம் காவல் ஆய்வாளர் பார்த்திபன், கீரைத்துறை காவல் ஆய்வாளர் பெத்துராஜ் ஆகியோர் ஆய்வுப் பணிகளில் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment