மதுரை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் தலைமையில், மாவட்ட கல்வி அலுவலர்கள், உதவி திட்ட அலுவலர்கள், வட்டார கல்வி அலுவலர்கள், மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள், வட்டார வளமைய (பொறுப்பு) மேற்பார்வையாளர்கள் ஆகியோருக்கு மீளாய்வுக் கூட்டம் நடைபெற்றது.

புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தில் மதுரை மேற்கு ஒன்றியத்தில் உள்ள அனைத்து மையங்களின் தன்னார்வலர்கள் மற்றும் மையங்கள் நடைபெறும் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களின் பங்கேற்பை அதிகரிக்க செய்து, சிறப்பான பங்காற்றியதற்காக, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மதுரை மேற்கு, வட்டாரக் கல்வி அலுவலர் ஜான் கென்னடி அலெக்சாண்டர்க்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்துக்கள் தெரிவித்தார்கள்.
தொடர்ந்து திறன்மிகு செயல்பாட்டால் மதுரை மேற்கு ஒன்றியத்தை 100% எழுத்தறிவு பெற்ற ஒன்றியமாக மாற்ற முயற்சிகள் மேற்கொள்ள கேட்டுக் கொண்டார்கள், ஒவ்வொரு மாதமும் புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தினை சிறப்பாகச் செயல்படுத்தும் ஒன்றியம் பாராட்டப்படும் எனவும் தெரிவித்தார்கள்.
No comments:
Post a Comment