முன்னாள் பாரத பிரதமர் வாஜ்பாய் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, சோழவந்தான் பகுதிகளில் இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது. வாடிப்பட்டி தெற்கு மண்டல் சார்பாக பிரச்சார பிரிவு மாநிலச் செயலாளர் ராஜா தலைமையில் தொகுதி பொறுப்பாளர் கோவிந்த மூர்த்தி முன்னிலையில் மண்டல் தலைவர் அழகர்சாமி பொதுச் செயலாளர் முத்துப்பாண்டி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் பெத்தன பாண்டி, தென்கரை சக்தி கேந்திர பொறுப்பாளர் எம் எஸ் விக்னேஸ்வரன், ஓபிசி அணி மண்டல தலைவர் நாட்டரசன், கிளைத் தலைவர் வனிதா, இளைஞர் அணி மண்டலத் தலைவர் ராம்குமார் மற்றும் நிர்வாகிகள் சண்முகம் ராஜகோபால் உள்பட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து, வாஜ்பாய், சாதனைகள் பற்றியும் அவரின் கனவுகள் தற்போது நிறைவேறிக் கொண்டிருப்பது பற்றியும், பிரச்சார பிரிவுத் தலைவர் ராஜா பேசினார்.

இதேபோல், மேலக்காலில் முன்னாள் பாரத பிரதமர் வாஜ்பாய் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. வாடிப்பட்டி தெற்கு மண்டல் மேலக்காலில் கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்தி பொதுமக்களுக்கு அன்னதானம் மற்றும் இனிப்புகள் வழங்கி வாஜ்பாய் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. கிளைத் தலைவர் அறிவழகன் தலைமையில், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர், தசர த சக்கரவர்த்தி, வர்த்தக பிரிவு மாவட்ட துணைத் தலைவர் மற்றும் சமயநல்லூர் மண்டல் பார்வையாளர் குகனேஸ்வரன் மண்டல் பொதுச் செயலாளர் மீன்கடை முருகேசன் மீனவ பிரிவு மாவட்ட செயலாளர் மற்றும் கிளை தலைவர் சந்தனகுமார் மற்றும் அறிவழகன் ஊராட்சி தலைவர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment