அய்யன்கோட்டை ஊராட்சி பகுதியில் கழிவு நீர் தேங்குவதால் சுகாதாரக் கேடு பொதுமக்கள் புகார். - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Friday 15 December 2023

அய்யன்கோட்டை ஊராட்சி பகுதியில் கழிவு நீர் தேங்குவதால் சுகாதாரக் கேடு பொதுமக்கள் புகார்.


மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட அய்யங்கோட்டை ஊராட்சி நகரி பொதுமக்கள் குடியிருக்கும் பகுதிகளில், கழிவுநீர் தேங்குவதால் சுகாதாரக் கேடு ஏற்பட்டு தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும், பல நாட்களாக தெருக்களில் கழிவு நீர் தேங்கி கிடப்பதால் குழந்தைகள் முதல் பெரியவர் வரை காய்ச்சல் பாதிப்பு காரணமாகமருத்துவமனை செல்லும் அவல நிலை தொடர்ந்து நிலவி வருவதாகவும், தெரிவிக்கின்றனர். 

இதுகுறித்து, ஊராட்சி மன்றத்தலைவர் மற்றும் ஊராட்சி செயலாளரிடம் பலமுறை புகார் தெரிவித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காததால், காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருவதாகவும் இதனால்  மருத்துவமனைக்கு செல்வோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்கும் சூழ்நிலை உருவாகி வருவதாகபொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். ஆகையால், மாவட்ட நிர்வாகம் தலையிட்டு டெங்கு மலேரியா போன்ற தீவிர நோய் தொற்று ஏற்படும் முன்  ஊராட்சியில் உள்ள பகுதிகளில் ப்ளீச்சிங் பவுடர் மற்றும் சுகாதாரமான முறையில் மருந்து தெளித்தல் மற்றும் கிருமி நாசினி உள்ளிட்டவைகள் தெளித்தல் பணிகளில் ஈடுபட வேண்டும் . ஊராட்சியில் ஒரு சிறப்பு மருத்துவ முகாம் அமைத்து பொதுமக்கள் அனைவருக்கும் பரிசோதனை செய்ய வேண்டும் என கேட்டு கொண்டுள்ளனர்.

No comments:

Post a Comment

Post Top Ad