மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே தாதம்பட்டி மேட்டுப் பெருமாள் நகர் ஐயப்பன் கோவிலில் 36வதுமண்டல பூஜை நடந்தது. இந்த பூஜையையொட்டி ஐயப்பனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை அர்ச்சனைகள் செய்யப்பட்டு ராஜ அலங்காரத்தில் அருள் பாலித்தார. இந்த பூஜையினை குருநாதர்கள் துரைராஜ், பாண்டி மற்றும் முருகன் பூசாரி செய்தனர். மதியம் 12 மணிக்கு நடந்த அன்னதான நிகழ்ச்சிக்கு சென்ட்ரல் பேங்க் மேனேஜர் சிவக்குமார் தலைமை தாங்கி தொடக்கி வைத்தார்.
ஆசிரியர் ஆசை கண்ணன் முன்னிலையும் வகித்தார். மாலை 6 மணிக்கு மின்விளக்கு, வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ரத்தத்தில் ஐயப்பன் புலி வாகனத்தில் ஊர்வலமாக முக்கிய வீதிகள் வழியாக சென்று கோவிலை வந்து அடைந்தார்.இதன் ஏற்பாடுகளை நிர்வாகிகள் கலைவாணன், கண்ணன் சக்திவேல், சுரேஷ் உட்பட நிர்வாகிகள் செய்திருந்தனர்.

No comments:
Post a Comment