திருமங்கலத்தில் இந்து அறநிலையத்துறையை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஊர் பொதுமக்கள் ஈடுபட்டனர். - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Friday 22 December 2023

திருமங்கலத்தில் இந்து அறநிலையத்துறையை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஊர் பொதுமக்கள் ஈடுபட்டனர்.


மதுரை மாவட்டம் திருமங்கலம் வட்டம் சித்தாலை கிராமத்தில் அமைந்துள்ள ஏழு ஊர் பங்காளிகளுக்கு பாத்தியப்பட்டஅருள் மிகு ஸ்ரீ சுந்தரவல்லி அம்மன் கோவில்.இந்த கோவில் தற்போது இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் மகா சிவராத்திரி அன்று சுவாமிகளின்  பெட்டி எடுக்கும் வைபவம் நடைபெறும். இத்திருவிழாவில் சித்தாலை, மேலஉரப்பனூர்,நல்ல பிள்ளை பட்டி,  புங்கங்குளம், ஆகிய சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து கிராம மக்கள் அனைவரும் கலந்து கொண்டு விழாவை சிறப்பாக நடத்துவர்.

விழாவின்  போது பெட்டி எடுக்கும் சமயம் ஊர் வகையறாக்களிடம் சண்டை சச்சரவு ஏற்பட்டது.இதை கருத்தில் கொண்டு இந்த கோவிலை இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. அதனால் ஆத்திரப்பட்ட மக்கள்  இந்து அறநிலையத்துறையை கண்டித்து  திருமங்கலம் ராஜாஜி சிலை முன்பு  கண்டன ஆர்ப்பாட்டத்தில்  ஈடுபட்டனர். வட்டாட்சியர் மனேஷ் குமார்,  காவல் துணை கண்காணிப்பாளர் வசந்தகுமார் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி இந்த ஆர்ப்பாட்டத்தை கலைந்து செல்ல செய்தனர்.இந்த ஆர்ப்பாட்டத்தில் தங்கவைரன் தலைமையேற்றார், மற்றும் கோவில் நிர்வாகிகள் பெரியகருப்பன், சுந்தரன், செல்வராஜ், பாண்டித்தேவர், மற்றும் மூக்கையா மற்றும் ஊர் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad