அதைத் தொடர்ந்து, திருவம்பாவை பாராயணம், சிறப்பு பூஜைகள், பிரசாதம் வழங்குதல் போன்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இவ்விழாவில், கோவில் செயல் அலுவலர் இளமதி, தொழில் அதிபர் எம். வி. எம் .மணி, கவுன்சிலர்கள் டாக்டர் மருது பாண்டியன், எம். வள்ளி மயில், கணக்கர் சி பூபதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முன்னதாக, நடராஜர், சிவகாமி, மாணிக்கவாசருக்கு பால், தயிர், மஞ்சள் பொடி போன்ற அபிஷேக திரவியங்களால், அபிஷேகம் நடைபெற்றது.
இதே போல, திருவேடகம் ஏடகநாசு சுவாமி ஆலயத்திலும், தென்கரை மூலநாத சுவாமி ஆலயத்திலும், மதுரை அண்ணா நகர், தாசில்தார் நகர் சித்தி விநாயகர் ஆலயத்திலும், வர சித்தி விநாயகர் ஆலயத்திலும், மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில், இம்மையில் நன்மை தருவார் திருக்கோவில், பழைய சொக்கநாதர் கோவில், திருமங்கலம் மீனாட்சி சுந்தரேசர் திருக்கோவில் ஆகிய கோவில்களில், நடராஜர் ,சிவகாமி, மாணிக்கவாசகர் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இதற்கான ஏற்பாடுகளை, விழா குழுவினர் மற்றும் ஆலய நிர்வாகிகள் கட்டளைதாரர்கள் செய்திருந்தனர்.
No comments:
Post a Comment