சோழவந்தானில் தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் மறைவையொட்டி அவரது திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து கண்ணீர் அஞ்சலி. - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Thursday, 28 December 2023

சோழவந்தானில் தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் மறைவையொட்டி அவரது திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து கண்ணீர் அஞ்சலி.


மதுரை புறநகர் மாவட்ட துணைச் செயலாளர் தங்கராஜ் தலைமையில் தேமுதிக நிறுவனரும் திரைப்பட நடிகருமான விஜயகாந்த் மறைவையொட்டி அவரது திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. ஒன்றிய செயலாளர்கள் முத்துப்பாண்டி தெய்வேந்திரன் முன்னிலை வகித்தனர். தென்கரை கிளை செயலாளர் அம்பலம், குருநாதன், சரவணன், ராசி ஸ்டுடியோ கண்ணன் உட்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். 

இதேபோல் சோழவந்தான் மாரியம்மன் கோவில் பகுதி மற்றும் வட்ட பிள்ளையார் கோயில் பகுதி ஆகிய இடங்களிலும் விஜயகாந்தின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்யப்பட்டது இதில் தேமுதிக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர் 

No comments:

Post a Comment

Post Top Ad