தைப்பொங்கலை அலங்கரிக்க அறுவடைக்கு காத்து நிக்கும் மஞ்சள் அலங்காநல்லூர் பகுதியில் தயாராகும் மலையாள மண்ட வெல்லம். - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Tuesday 26 December 2023

தைப்பொங்கலை அலங்கரிக்க அறுவடைக்கு காத்து நிக்கும் மஞ்சள் அலங்காநல்லூர் பகுதியில் தயாராகும் மலையாள மண்ட வெல்லம்.


பாரம்பரியமிக்க பண்டிகைகளில், அனைத்து தரப்பு மக்களும் சாதி மத சமூக சமுதாய வேறுபாடின்றி கொண்டாடப்படும் சமத்துவ திருவிழா தைப்பொங்கல் பண்டிகை ஆகும். தமிழகத்தில் மட்டுமல்லாது உலக அளவில் கொண்டாடப்படும் ஒற்றுமைக்கான ஒரு விழா தைப்பொங்கல் திருநாள்கொண்டாடப்படுகிறது.

இதற்கு காரணம் உலகத்திற்கு ஒளி கொடுக்கும் சூரிய பகவானை வழிபடும்நிகழ்வு இன்றளவும் விவசாயம் செழிக்க வேண்டும் என்று பாரம்பரிய விவசாயத்தை கைவிடாமல் தமிழர்களின் பண்பாட்டை காத்து வரும் மக்கள் அனைவரும் கொண்டாடும் விழாவாக தைப்பொங்கல் திருநாள் போற்றப்படுகிறது. மேலும், இந்த விழாவிற்கு பெருமை சேர்க்கும் விதமாக பழையன கழிதலும் புதியன புகுதலும் என்பதற்கு இணங்க போகிப் பண்டிகை தைப்பொங்கல் திருநாள் காணும் பொங்கல் என்று ஒவ்வொரு நாளுக்கும் ஒரு சிறப்பை உருவாக்கி அந்த விழாவிற்கு இன்றுவரை பெருமை சேர்க்கும் விதமாக உலகத்தமிழர்கள் அனைவரும் கொண்டாடும் ஒரு உன்னத திருவிழா பொங்கல் பண்டிகையாகும்.

 

இந்த திருவிழா ஏழை பணக்காரர் என்ற பாகுபாடு இல்லாமல் அனைவரும் பயன்படுத்தும் ஒரு முக்கிய மூலப்பொருள் கரும்புச் சாறில் இருந்து காய்ச்சி எடுக்கப்பட்ட ராட்சத இரும்பு கொப்பரைகளில் காய்ச்சப்பப்பட்டு மலையாள மண்ட வெல்லம் தயாராகிறது. அதேபோல், புது பானையை அலங்கரிக்கும் மஞ்சள் கொத்து செடிகளும் செங்கரும்பும் பாரபட்சமின்றி பயன்படுத்தப்படும் பொருளாக கருதப்படுகிறது. இவ்வாறு பழம் பெருமையும் பாரம்பரியம் வாய்ந்த, செங்கரும்பு மலையாள மண்ட வெல்லம் ஆகியவை பொங்கல் பண்டிகைக்காக மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில், விறுவிறுப்பாக தயாராகி வருகிறது. அதே போல், மஞ்சள் கிழங்கு செடிகளும் ஆறுவடைக்காக தயார் நிலையில் உள்ளது.


மதுரை மாவட்டத்தின் வட பகுதியான அலங்காநல்லூர், பாலமேடு ஆகிய இடங்களில் விளைவிக்கப்படும் மஞ்சள் செடிகள் தமிழகம் முழுவதும் மட்டுமல்லாது உலகெங்கிலும் ஏற்றுமதி ஆகி வருவது குறிப்பிடத்தக்கது. அதேபோல், அலங்காநல்லூர், பாலமேடு சுற்றுவட்டாரப் பகுதியில்கரும்பு அரவை செய்து சாறு பிழிந்து ராட்சத கொப்பரையில் காய்ச்சி எடுத்த பக்குவப்படுத்தப்பட்ட மலையாள மண்ட வெல்லம் வெல்லம்உற்பத்தி தீவிரமாக நடைபெற்று வருகிறது.


மலையாள மண்ட வெல்லம் பெயர் காரணம், கரும்புச்சாறில் இருந்து பாதுகாக்கப்பட்டு பக்குவப்படுத்தப்பட்ட வெள்ளம் தேங்காய் எண்ணெய் கொண்டு கைகளில் உருண்டைகளாக பொருத்தப்பட்டு வெல்லத்திற்கான உருவம் தரப்படுகிறது வெள்ளம் என்பது அச்சு வெல்லம் ,உருண்டை வெள்ளம், மண்ட வெல்லம் என்று பலவித உருவங்களில் செய்யப்பட்டு வந்தாலும் எந்தவிதமான அச்சுகளும் பயன்படுத்தாமல் கைகளினால் உருண்டைகளாக பிடிக்கப்பட்டு செய்யப்படும் இந்த வெல்லத்தை மலையாள மண்ட வெல்லம் என்று அழைக்கிறார்கள். 


இவ்வாறு தயாராகும் வெல்லம் அதிக அளவில் கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கு  ஏற்றுமதியாகும் காரணங்களால் இதற்கு மலையாள மண்ட வெல்லம் என்று பெயர் வந்ததாக வெல்ல உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர். மேலும், ஓணம் பண்டிகை காலத்தில் கையில் உருட்டப்பட்ட வெல்லத்திற்கு கேரளாவில் அதிக மவுசு உள்ளதாக கூறப்படுகிறது. 

No comments:

Post a Comment

Post Top Ad