துணை முதல்வர் முனைவர் கார்த்திகேயன், தேர்வுக் கட்டுப்பாட்டாளர் முனைவர் ஜெயசங்கர் மற்றும் அகத்தர உறுதி மைய ஒருங்கிணைப்பாளர் முனைவர் சதீஷ்பாபு சிறப்புரையாற்றினர்கள். மாணவர்களின் படிப்பு, விளையாட்டு, வேலைவாய்ப்பு, தகுதி மேம்பாட்டு பயிற்சி தேவை பற்றி பெற்றோர்களுடன் கலந்துரையாடல் நடைபெற்றது. மேலும், பெற்றோர்கள் தங்கள் கருத்துகளை தெரிவித்தனர். கல்லூரி முதல்வர் வெங்கடேசன் பெற்றோர்களின் கருத்துக்களுக்கு விளக்கமும் வழங்கினார். குருகுல ஒருங்கிணைப்பாளர் முனைவர் சந்திரசேகரன், மாணவர் ஒருங்கிணைப்பாளர்கள் முனைவர் பிரேமானந்தம், முனைவர் காமாட்சி, இரகு ஆகியோர் பெற்றோர் கூட்டத்தின் அனைத்து ஏற்பாடுகளையும் முன்னின்று கவனித்துக்கொண்டார்கள்.

முதலாம் ஆண்டு மாணவன் ஜனநாதன், இரண்டாம் ஆண்டு மாணவன் தமிழ்செல்வன், நவீன்குமார் நன்றி உரை ஆற்றினர்கள். பெற்றோர் கூட்டத்தை முறையே முதலாம் ஆண்டு மாணவன் ஜெகநாதன், இரண்டாம் ஆண்டு மாணவன் அபினேஷ், இறுதி ஆண்டு மாணவன் மாணிக்கவாசக யுதிஸ்திரன், தொகுத்து வழங்கினர்கள்.
No comments:
Post a Comment