சோழவந்தான் அருகே திருவாலவாயநல்லூர் கிராமத்தில் உள்ள ஹஜரத் செய்யிது ஷாஹீல் ஹமீது காதிரொலி பாதுஷாவின் சந்தனகூடு உருஸ் நடந்தது. டிரஸ்டிசித்திக் இப்ராகிம் தர்கா கமிட்டினர் எத்தி ஹரஷா சாஹிப் சர்குரு என்ற இம்தியாஸ் அபுதாஹீர் ஜாஹீர் உசேன் ஜிலான் பாஷா ஆகியோர் முன்னிலையில் சந்தனகூடு உருஸ்விழா நடந்தது. இவ்விழாவை முன்னிட்டு 14ஆம் தேதி கந்தூரி விழா கொடியேற்ற விழா நடந்தது. அன்று முதல் விழா நடந்து வந்தது.

நேற்று விழா நிறைவு பெற்றது. சந்தன கூடு உருஸ் பள்ளிவாசலில் இருந்து புறப்பட்டு காட்டுப்பள்ளி வாசல் சென்று பின்னர் புறப்பட்ட இடத்திற்கு வந்து சேர்ந்தது. இங்கு கிராம பொதுமக்கள் அனைவருக்கும் சந்தனம் வழங்கப்பட்டது. சோழவந்தான் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் பழனிச்சாமி தலைமையில் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடு செய்திருந்தனர். திருவாலவாயநல்லூர் ஊராட்சி சுகாதாரப் பணியை செய்திருந்தனர். மதுரை உள்பட பல்வேறு இடங்களில் இருந்து இஸ்லாமியர்கள் வந்திருந்தனர்.
No comments:
Post a Comment