சோழவந்தான் அருகே, கீழ்நாச்சிகுளத்தில் கால்நடை மருத்துவரை கண்டித்து, மாடுகளுடன் பஸ் மறியல். - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Wednesday 20 December 2023

சோழவந்தான் அருகே, கீழ்நாச்சிகுளத்தில் கால்நடை மருத்துவரை கண்டித்து, மாடுகளுடன் பஸ் மறியல்.


மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே கீழ் நாச்சிகுளம் கிராமத்தில், கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக கால்நடை மருத்துவமனை செயல்பட்டு வந்தது. இந்நிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திடீரென அருகிலுள்ள கரட்டுப்பட்டி கிராமத்திற்கு மாற்றம் செய்யப்பட்டது‌. அப்போது, பொதுமக்களின் எதிர்ப்பை அடுத்து காலை மாலை இருவேளைகளில் வாரம் இரண்டு நாட்கள் இங்கு வந்து மாடுகளுக்கு சிகிச்சை அளிக்கப்படும் என்று மருத்துவர்கள் தரப்பிலும் அதிகாரிகள் தரப்பிலும் தகவல் தெரிவிக்கப்பட்டது. 

ஆனால், சரிவர மருத்துவர்கள் கீழ் நாச்சிகுளம் கிராமத்திற்கு வருவதில்லை. இதனால் ,இந்த பகுதியில் சுமார் 300க்கும் மேற்பட்ட பசுமாடுகள் காளை மாடுகள் ஆடுகள் நோய்வாய்ப்படும் போது, காட்டுப்பட்டி கிராமத்திற்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்து வந்தனர். இதனால், அதிக அளவிலான பாதிப்பில் மாடு வளர்ப்போர் இருந்து வந்தனர். இதுகுறித்து, மண்டல இணை இயக்குனர் அலுவலகத்திற்கு கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பாக புகார் தெரிவிக்கப்பட்டது. 


அப்போது முறையாக வந்து சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுப்பதாக கூறினார் ஆனாலும், வரவில்லை. இன்று காலை ஐம்பதுக்கு மேற்பட்ட பசு மாடுகளுடன் மாடு வளர்ப்போர் திடீரென பஸ் மறியலில் ஈடுபட்டனர், இதனால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பள்ளி செல்லும் மாணவ மாணவியர் பணிக்குச் செல்லும் ஏராளமானோர் பாதிக்கப்பட்டனர். இது குறித்து தகவல் அறிந்த  ஊராட்சி மன்றத் தலைவர் சுதமாறன் மற்றும் காவல் துறையினர் சமரச பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என, உறுதி அளித்ததின் பேரில் சாலை மறியல் கைவிடப்பட்டது.

No comments:

Post a Comment

Post Top Ad