ஆறு முதல் எட்டாம் வகுப்பு படிக்கும் பெண் குழந்தைகளுக்கான தற்காப்பு கலை பயிற்சி. - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Monday 18 December 2023

ஆறு முதல் எட்டாம் வகுப்பு படிக்கும் பெண் குழந்தைகளுக்கான தற்காப்பு கலை பயிற்சி.


மாநிலத் திட்ட இயக்குனர் செயல்முறைகளின் படி 2023..24 கல்வியாண்டிற்கான பெண் கல்வி சார்ந்து ஆறு முதல் எட்டாம் வகுப்பு படிக்கும் பெண் குழந்தைகளுக்கான தற்காப்பு கலை பயிற்சி  இந்த ஆண்டு டிசம்பர் இறுதி வாரங்களில் மதுரை மாவட்டத்தில்  பள்ளி மாணவிகள் எந்த ஒரு சூழலையும் பக்குவமாக எதிர்கொள்ளும் ஆற்றல் மற்றும் வாழ்வியல் திறனை அதிகரிக்கும் வகையிலும் இடைநிற்றலை தவிர்க்கும் விதமாகவும் மேல்நிலை கல்வி தொடர்வதற்கு  ஏற்றபடியும் மாணவிகளுக்கு தன்னம்பிக்கை வளர்க்கும் விதமாக பள்ளிக் கல்வித் துறையில் தற்காப்பு கலை பயிற்சி மாணவியர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. 

இதன் தொடர்ச்சியாக மதுரை மாவட்டத்தில் உள்ள 441 பள்ளிகளிலும் கராத்தே.. ஜூடோ.. டேக்வாண்டோ மற்றும் சிலம்பம் பயிற்சிகளில் ஏதேனும் ஒன்றை மாணவிகளுக்கு பயிற்சிகள் வழங்கப்பட இருக்கிறது.. ..  பயிற்சிகள் சார்ந்தும் ...தற்காப்பு கலை பயிற்றுநர்களை தேர்ந்தெடுக்கும் விதம் சார்ந்தும் பயிற்சியாளரை பள்ளி மேலாண்மை குழு மூலம் தேர்வு செய்வது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. வாரத்தில் ஏதேனும் இரண்டு நாட்களில் ஒவ்வொரு பள்ளியிலும் மாநிலத் திட்ட இயக்கத்தின் மூலம் வழங்கப்பட்டுள்ள பாடத்திட்டத்தின் படி மூன்று மாதங்களுக்கு இப்பயிற்சி நடைபெறும். 


குறிப்பாக மாணவிகளுக்கு பயிற்சி என்பதால் பெண் பயிற்றுநர்களை தேர்வு செய்வதற்கு முக்கியத்துவம் அளிக்க கூறப்பட்டுள்ளது. பெண் பயிற்றுநர்கள் இல்லாத பட்சத்தில் பயிற்சி நடைபெறும் நாட்களில் பெண் ஆசிரியர்கள் துணையுடன் பயிற்சியை நடத்தவும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. பயிற்சியானது மூன்று மாதங்களுக்கு மாதத்திற்கு 8 வகுப்புகள் மீதும் 24 வகுப்புகள் நடைபெறும் பயிற்சிக்காக பயிற்சியாளர்களுக்கு ஊதியமாக மாதமாக 4000 மற்றும் பயிற்சி நடைபெறும் நாட்களில் மாணவிகளுக்கான சிற்றுண்டி செலவீனமாக ஆயிரம் ஆக மொத்தம் 5000 ரூபாய் ஒவ்வொரு மாதமும் விடுவிக்கப்பட இருக்கிறது. 


பயிற்சியில் அதிகபட்சமாக 100 மாணவிகள் கலந்து கொள்ள உள்ளணர். பயிற்சி பயிற்றுநர்களை தேர்ந்தெடுக்கும் போது மாநிலத் திட்ட இயக்குனர் அவர்களின் வழிமுறைகளின்படியும் பாடத் திட்டத்தின் படியும் எந்தவித மாறுதலும் இல்லாமல் பாதுகாப்பாக பயிற்சி நடைபெற உறுதி செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

No comments:

Post a Comment

Post Top Ad